சரவாக் அமைச்சரவை
சரவாக் அமைச்சரவை (ஆங்கிலம் Cabinet of Sarawak; மலாய்: Kabinet Sarawak ) என்பது மலேசியா சரவாக் மாநில அரசாங்கத்தின் அமைச்சரவை (ஆட்சிக் குழு) ஆகும். சரவாக் ஆளுநர் அவர்களால் நியமிக்கப்பட்ட சரவாக் பிரதமர் என்பவர் சரவாக் அமைச்சரவைக்குத் தலைமை தாங்குகிறார். சரவாக் பிரதமர் என்பது சரவாக் மாநிலத்தின் முதலமைச்சரை குறிப்பதாகும். சரவாக் பிரதமர் எனும் தற்போதைய பதவி, முன்பு சரவாக் முதல்வர் என்று அழைக்கப்பட்டது. 2022 பிப்ரவரி 15-ஆம் தேதி சரவாக் மாநில அரசியலமைப்பில் ஒரு திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி சரவாக் முதல்வர் எனும் பதவி; பிரதமர் பதவி என்று மறுபெயரிடப் பட்டது. அரசியலமைப்புத் திருத்தம் அரசிதழில் வெளியிடப்பட்டு 2022 மார்ச் 1 முதல் நடைமுறைக்கு வந்தது.[1] பொதுசரவாக் அமைச்சரவையானது, சரவாக் பிரதமரின் பரிந்துரையால், சரவாக் மாநில சட்டமன்றம்|மாநில சட்டமன்றத்தில்]] இருந்து பெறப்பட்ட உறுப்பினர்கள் எனும் அமைச்சர்களை உள்ளடக்கியது. சரவாக் பிரதமர், சரவாக் மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றவராக இருக்க வேண்டும். அமைச்சரவையில் மாநிலச் செயலாளர், மாநில சட்ட ஆலோசகர் மற்றும் மாநில நிதி அதிகாரி ஆகியோரும் இடம் பெறுகிறார்கள். அமைச்சர்களின் பட்டியல்
மேலும் காண்கமேற்கோள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia