சபா அமைச்சரவை (ஆங்கிலம்Cabinet of Sabah; மலாய்: Kabinet Negeri Sabah என்பது மலேசியாசபா மாநில அரசாங்க நிர்வாக ஆட்சிக்குழுவாகும். சபா அரசாங்கத்தின் நிர்வாகப் பிரிவின் ஒரு பகுதியாகச் செயல்படும் இந்த ஆட்சிக்குழு மாநில அமைச்சரவை என அழைக்கப்படுகிறது. மலேசிய மாநிலங்களில் சபா, சரவாக் மாநிலங்களில் மட்டும் மாநில ஆட்சிக் குழுவை மாநில அமைச்சரவை என அழைக்கிறார்கள்.
சபா ஆளுநர் அவர்களால் நியமிக்கப்படும் சபா முதலமைச்சர்; சபா மாநிலத்தின் அமைச்சரவைக்குத் தலைமை தாங்குகிறார். சபா முதலமைச்சர் என்பவர், சபாமாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றவராக இருக்க வேண்டும். மாநில அமைச்சரவையில் மாநிலச் செயலாளர், மாநில சட்ட ஆலோசகர் மற்றும் மாநில நிதி அதிகாரி ஆகியோரும் இடம் பெறுகிறார்கள்.
பொது
சபா அமைச்சரவை என்பது மலேசிய நடுவண் அரசாங்கத்தின் மலேசிய அமைச்சரவை கட்டமைப்பைப் போன்றதாகும். ஆனாலும் மாநில அமைச்சரவை அளவில் சிறியது. மலேசிய நடுவண் அரசாங்கத்தின் பொறுப்புகளும், மாநில அரசாங்கத்தின் பொறுப்புகளும் வேறுபடுவதால்; மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையிலான பல துறைகளும் மாறுபடுகின்றன.
சபா அமைச்சரவை உறுப்பினர்கள் சபா முதலமைச்சரால் தேர்ந்தெடுக்கப்பட்டு சபா ஆளுநரால் நியமிக்கப் படுகிறார்கள். ஒவ்வோர் அமைச்சருக்கும் ஓர் அமைச்சு உண்டு. ஒவ்வோர் அமைச்சும் மாநில விவகாரங்கள், மாநிலச் செயல்பாடுகள் மற்றும் பல்வகை மாநிலத் துறைகளைக் கவனித்துக் கொள்ளும். அமைச்சரவை உறுப்பினர் வழக்கமாக ஒரு மாநில அமைச்சின் தலைவராக இருப்பார்.
அமைச்சர்களின் பட்டியல்
சனவரி 11, 2023 நிலவரப்படி, தற்போதைய அமைச்சரவையின் அமைப்பு பின்வருமாறு:[1]