பிரதேச சபை (இலங்கை)
பிரதேச சபை (Divisional Council) என்பது இலங்கையின் உள்ளூராட்சி அமைப்புகளில் ஒன்று. இவை 1978ல் உருவாக்கப்பட்டன. ஆரம்பத்தில் இதன் உறுப்புரிமையானது கிராமோதய சபைத் தலைவர்கள் மற்றும் பதவி வழிகாரணமாக உதவி அரசாங்க அதிபர், உதவி அரசாங்க அதிபர் பிரிவில் கடமையாற்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள் (உதாரணமாக கிராம சேவையாளர் போன்றோர்) இடம்பெறுவர். இச்சபையின் தலைவராக பதவி வழியற்ற யாராலும் ஒருவர் (சபை தெரிவு செய்பவர்) இடம்பெறுவார். இச்சபையின் செயலாளராகப் பதவி வழிகாரணமாக உதவி அரசாங்க அதிபர் இடம்பெறுவார். 1987ம் ஆண்டின் 15ம் இலக்க சட்டமூலம்1987ம் ஆண்டின் 15ம் இலக்கப் பிரதேச சபைகள் சட்டமூலம் பிரதேசசபையின் அமைப்பு, தெரிவு, நோக்கங்கள், அதிகாரங்கள் செயற்பாடுகளில் பல மாற்றங்களை ஏற்படுத்தின. பிரதேச சபையின் நோக்கம் உள்ளூராட்சி மட்டத்தில் நிர்வாக மாற்றம், அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பாக முடிவுகளை எடுத்தல், நடைமுறையில் பயனுறும் வகையில் மக்கள் பங்குபற்றுவதற்கு வாய்ப்புக்களை வழங்கல் மேற்படி சட்டத்தின்படி பிரதேசசபைப் பிரதிநிதிகள் தேர்தல் மூலம் மக்களால் தெரிவுசெய்யப்படுவர். இதன்படி முதலாவது பிரதேச சபைகளுக்கான தேர்தல் 1991 மே 1ம் திகதி நடைபெற்றது.
எல்லைஉதவி அரசாங்க அதிபர் பிரிவில் (தற்போதைய பிரதேச செயலகப்பிரிவில்) காணப்படும் மாநகரசபை, நகரசபை எல்லைகள் தவிர்ந்த ஏனைய நிலப்பரப்பு, பிரதேச சபைகளின் நிலப்பரப்பாகும். உறுப்பினர்கள் எண்ணிக்கைபிரதேசசபையின் உறுப்பினர் எண்ணிக்கை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாணசபை அமைச்சரினால் வர்த்தமானியில் வெளியிடப்படும். விடேச கட்டளையொன்றினால் தீர்மானிக்கப்படும். தெரிவு1979 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த முழுமையான விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறைமைக்குப் பதிலாக வட்டார முறைமையும் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறைமையும் உள்ளடங்கிய கலப்பு விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமை 2017 ஆம் ஆண்டின் 16-ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபைகள் திருத்தச் சட்டத்தின் மூலம் 2017 செப்டெம்பர் 1 இலிருந்து செயல்படுத்தப்பட்டது. இப்புதிய தேர்தல் முறைமைக்கமைய 60% உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்தும், 40% மேலதிகப் பட்டியலில் இருந்தும் தெரிந்தெடுக்கப்படுகிறார்கள். இத்தேர்தலின்போது 25% பெண்கள் பிரதிநிதித்துவம் கட்டாயமாக்கப்பட்டது.[1] பதவிக்காலம்தேர்தல் முடிந்து பதவியேற்ற நாளிலிருந்து 4 வருடங்களாகும். இக்காலகட்டத்தினைக் கூட்டவோ அல்லது குறைக்கவோ அமைச்சருக்கு அதிகாரமுண்டு. (1995ம் ஆண்டில் நடைபெறவிருந்த உள்ளூராட்சி தேர்தல் 1997ல் நடைபெற்றதைக் கொண்டு இதனை உறுதிப்படுத்தலாம்.) தவிசாளரும், துணைத் தவிசாளரும்
பிரதேசசபைக் குழுக்கள்பின்வரும் நோக்கங்களுக்காகப் பிரதேசசபைக் குழுக்கள் அமைக்கப்படலாம்.
பிரதேச சபைகளின் அதிகாரங்கள்
இது போன்ற 24 திட்டங்கள் குறிக்கப்பட்டுள்ளன. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia