பி. ஜி. கருத்திருமன்
பி. ஜி. கருத்திருமன் (P. G. Karuthiruman), தமிழக அரசியல்வாதியாகவும், தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். இவர் மதராஸ் மாநிலத்தின் கடைசி எதிர்க்கட்சி தலைவரும்,தமிழகத்தின் முதலாவது எதிர்க்கட்சி தலைவரும் ஆவார்.1952 ஆம் ஆண்டில் நம்பியூர் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராக, தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். பின்னர் 1957 தேர்தலில் கோபிச்செட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதியிலும், 1967 தேர்தலில் சத்தியமங்கலம் சட்டமன்றத் தொகுதியிலும் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இவர் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நஞ்சை புளியம்பட்டி எனும் கிராமத்தில் பிறந்தவர். இவர் காந்தியக் கொள்கையை நடைமுறையில் பின்பற்றிய காந்தியவாதி ஆவார். புகழ் பெற்ற காமராசர் மற்றும் சி. சுப்பிரமணியம் ஆகியவர்களை எளிதில் அணுகக்கூடியவராக இருந்தவர். ஒரு அரசியல் தலைவராக இருந்தாலும் தமிழ் இலக்கியத்தில் புகழ் பெற்ற காவியமான கம்பராமயணத்தில் ஒரு பெரிய அறிஞர் ஆவார். இக்காவியம் குறித்து பல கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியுள்ளார். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia