பொன்னப்ப நாடார்
இராகவன் பொன்னப்பன் (11 ஏப்ரல் 1921 - 12 அக்டோபர் 1976), தமிழ்நாட்டின் இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அரசியலர் மற்றும் வழக்கறிஞர் ஆவார். திருவிதாங்கூர்-கொச்சி சட்டமன்றத்தில் கிள்ளியூர் தொகுதிக்கான உறுப்பினராக (1952-56) பணியாற்றினார். கன்னியாகுமரி, மதராசு மாநிலத்துடன் (தமிழ்நாட்டின் முன்னோடி) இணைக்கப்பட்ட பிறகு, மீண்டும் மதராசு மாநில சட்டமன்றத்தில் கிள்ளியூர் தொகுதி உறுப்பினராகவும் (1962-67) அதன்பின் விளவங்கோடு தொகுதி உறுப்பினராகவும் (1967-76) பணியாற்றினார். தொடக்க வாழ்க்கைபொன்னப்ப நாடார் 11 ஏப்ரல் 1921 இல் பிறந்தார். (ஆனால் பள்ளிக்கூட பதிவுகள் 3 மார்ச் 1923 என்கின்றன). பிறந்த இடம் பாலவிளை, கருங்கல், மிடாலம் கிராமம், விளவங்கோடு தாலுகா, கன்னியாகுமரி மாவட்டம். தந்தை என்.இராகவன் நாடார் அம்மா அம்மால், இவருக்கு ஒரு சகோதரன் ஆர்.தங்கப்பன் நாடார் மற்றும் இரண்டு சகோதரிகள் பல்தங்கம், தங்கம். செயின்ட் ஆந்தோணியார் தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பை நிறைவுசெய்தபின் முஞ்சிறை அரசு நடுநிலைப்பள்ளியில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்றார். இங்கு படிக்கும் போது, சாதி அடிப்படையில் மாணவர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து மதிய உணவை வழங்கிய முறையை எதிர்த்து சில வேளைகளில் மதிய உணவை புறக்கணித்துவந்தார். இரணியல் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயின்று 1937-இல் E.S.L.C தேர்வை எழுதினார். 1942-இல் திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் பி.ஏ (கான்சு) பட்டம் பெற்றார். இவர் பல்கலைக்கழகம் அளவில் மூன்றாம் இடத்தைப் பெற்றார். தனது கல்லூரி நாட்களில் பேட்மிண்டன், ஹாக்கி மற்றும் கூடைப்பந்து விளையாட்டுகளில் சிறந்த விளையாட்டு வீரராக விளங்கினார். பல்கலைக்கழக மாணவர் அமைப்பில் செயலாளர் பதவியையும் வகித்துள்ளார். அவரது சிறந்த ஆங்கில புலமை மற்றும் ஆங்கில பேச்சாற்றல் கொண்டிருந்தார். 1944 ஆம் ஆண்டில் திருவனந்தப்புரம் சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டம் முடித்தார். திக்கணங்கோடு அருகே பட்டவிலியைச் சேர்ந்த ஆறுமுகன் நாடரின் மூத்த மகள் ரோச்லெட் ரோச்லெட் என்பவரை 11 நவம்பர் 1949 அன்று திருமணம் செய்தார். வழக்கறிஞர் பணிபொன்னப்பனின் அண்ணன் ஞானசிகாமணி இவரை இளைய வழக்கறிஞராக இணைத்துக்கொண்டார். ஞானசிகமணியின் வழிகாட்டியான நேசமணி “நீங்களே ஒரு நல்ல அரசாங்க வேலையைப் பெறலாம், உங்களுடைய படிப்புகள் அதை எளிதாக்கும் என்று அறிவுரை கூறினார். அதற்கு திரு. பொன்னப்ப நாடர் பதிலளித்தார்,“ இதை நான் அறிவேன், இளைய வழக்கறிஞராக பணியாற்ற நான் தயாராக இருக்கிறேன் அதுவே எனக்கு விருப்பம் என்றார்”. கடுமையாகவும் ஆர்வத்துடன் சட்டத்தின் தந்திரங்களைக் கற்றுக்கொண்டார். இவரின் அர்ப்பணிப்பால் தலைமை பிரதிநிதியாக மாற்றினார். திரு. பொனப்ப நாடார் விசாரணையில் இருக்கும்போது நீதிபதிகளுக்கு வழங்கப்பட வேண்டிய வாதங்களை தயாரிப்பதில் மிகவும் திறமையானவர், அவர் தயாரித்த வாதங்கள் ஒப்பிடமுடியாதவை. திரு. பொன்னப நாடார் கன்னியாகுமரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மிக சிறந்து விளங்கினார், இதன் போது அவர் நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தில் (Bar Association) தலைவராக தனது கடமைகளைச் சிறப்பாக செய்தார்.அவர் ஆங்கில புலமை மற்றும் வாதத்திறனில் வல்லவர் இதனால் நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்களிடமிருந்து உயர் மதிப்பீடுகளைப் பெற்றது தந்தது. அவரது வாதங்களைக் கேட்க மக்கள் கூட்டம் நீதிமன்றத்தற்க்கு வருவார்கள். அரசியல்திருவிதாங்கூர்-கொச்சின்திருவிதாங்கூரில் விவசாய விளைபொருட்களை வரிகளாக வசூலித்தது. விவசாயிகள் தங்கள் பயிர்கள் போதுமான விளைச்சலை கொடுக்காத நேரங்களில் கூட கட்டாயமாக தங்கள் வரிகளை செலுத்த நிர்ப்பந்திக்கப்பட்டனர். இந்த நியாயமற்ற நடைமுறை அரசியலில் நுழைவதற்கான அவரது விருப்பத்தை அதிகரித்தது. 1952 ல் நடந்த திருவாங்கூர்-கொச்சி சட்டமன்றத்தேர்தலில் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியிலிலருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரசு சார்பில் போட்டியிட்ட ஏ கேப்ரியலைதோற்கடித்தார். கேப்ரியேல் 2,718 வாக்குகளுக்கு எதிராக பொன்னப்ப நாடார் 17,084 வாக்குகளைப் பெற்றார். தேர்தலில் பதிவான செல்லுபடியாகும் வாக்குகளின் மொத்தம் 25,512 ஆகும்.[1] அதே தொகுதியில் இருந்து 1954 ல் நடந்த இடைக்காலத் தேர்தலில் மீண்டும் கேப்ரியேலை தோற்கடித்தார்.[2] மதராசு மாநிலம் / தமிழ்நாடுகன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டோடு இணைந்த பின்னர் மூன்று முறை அவர் தமிழ்நாடு சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962 தேர்தலில் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் .[3] மேலும் 1967 மற்றும் 1971 தேர்தல்களில் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் [4] இதுபோன்ற மற்றொரு சம்பவம் திருவனந்தபுரத்தில் தனது கல்லூரி நாட்களில், அவர் வில்சு மாணவர்கள் விடுதியில் தங்கியிருந்தார், அங்கு அவர் பல சுதந்திர போராளிகளுக்கு உணவு மற்றும் தங்குமிடங்களை வழங்கினார். மறைவுமுதன்மைக் கட்டுரை: இந்தியன் ஏர்லைன்சு பறப்பு 171 பொன்னப்பனார், 10 அக்டோபர் 1976 அன்று நடைபெறவிருந்த ஒரு மாநாட்டில் பங்கேற்க அக்டோபர் 8 அன்று மகாராட்டிரத் தலைநகர் பம்பாய்க்கு (தற்போது மும்பை) புறப்பட்டார். மாநாடு முடிந்தவுடன் தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழுவின் கூட்டத்தில் கலந்து கொள்ள அவர் உடனடியாக அக்டோபர் 11 அன்று சென்னைக்குத் திரும்ப வேண்டியிருந்தது. பம்பாயின் சாகர் (தற்போது ''சத்திரபதி சிவாஜி மகாராஜ்") பன்னாட்டு வானூர்தி நிலையத்துக்குச் சென்ற அவர், நள்ளிரவில் அங்கிருந்து மதராசு பன்னாட்டு வானூர்தி நிலையத்துக்குப் புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்சு வானூர்தி 171-இல் ஏறினார். அவ் வானூர்தி, 27-ஆவது ஓடுபாதையில் இருந்து புறப்பட்டபின் எந்திரக் கோளாறு ஏற்பட்டதால், மீண்டும் நிலையத்தில் தரையிறங்கவேண்டிய நிலை ஏற்பட்டது. எந்திரத்தில் பற்றிய தீயினால், 9-ஆவது ஓடுபாதையை நெருங்கும் போது கட்டுப்பாட்டை இழந்த வானூர்தி, 300 அடி உயரத்திலிருந்து சரிந்து அக்டோபர் 12, இ.சீ.நே. 1:40 மணிக்கு, தரையில் 45° கோணத்தில் மோதியது. அப்போது அது ஓடுபாதையை நெருங்க 1000 அடிகள் தொலைவே இருந்தது.[5] பொன்னப்பனார் உட்பட பயணிகள், பணியாளர்கள் என அவ் வானூர்தியிலிருந்த 95 பேரும் உயிரிழந்தனர். பொன்னப்பனாரின் உடல் பம்பாயிலேயே எரியூட்டப்பட்டது. அவரது அஸ்தி, சென்னைக்கு கொண்டு வரப்பட்டு அங்கு அதன் ஒரு பகுதி, மெரினா கடற்கரையில் கரைக்கப்பட்டது. மறுபகுதி, பாலவிளைக்கு கொண்டு வரப்பட்டு, சடங்குகளுக்குப் பின் குமரிக்கடலில் கரைக்கப்பட்டது. புகழ்திரு.பொன்னப்ப நாடார் மிகுந்த எளிமையான குணமுடையவர். அவர் தனது உடை மற்றும் உணவுப் பழக்கத்தில் எளிமையாகவே இருந்தார். தன்னை அணுகியவர்களுக்கு அவர்களை நிராகரிக்காமல் அவர் எப்போதும் தன்னல் ஆனவற்றை வழங்கினார். தன்னுடைய பார்வையாளர்கள் அவர்களுடன் உரையாடுவதற்கு முன்பு தங்களை அமர்ந்திருப்பதை அவர் எப்போதும் உறுதிசெய்தார். அவர் பொதுமக்களை சந்திக்க நடந்து அல்லது பொது பேருந்தில் பயணம் செய்து சந்திப்பரர். அவர் ஏழைகளுக்கும், புறக்கணிக்கப்பட்டவர்களுக்கும், கைம்பெண்களுக்கும் சேவை செய்யும் விதமான வாழ்க்கையை வாழ்ந்தார். பொன்னப்பனாரின் நூற்றாண்டு நிறைவையொட்டி அவரின் உருவச் சிலை, நாகர்கோவில் நகரில் ரூ.50 லட்சம் செலவில் நிறுவப்படும் என 16 ஏப்ரல் 2025 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் அறிவித்தார்.[6] வழிமரபினர்பொன்னப்பனார்-ரோச்லெட் இணையருக்கு ஆறு குழந்தைகள் பிறந்தனர்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia