புலிவலம்
புலிவலம் (Pulivalam) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டம், திருவாரூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும். அமைவிடம்இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 10°45'12.1"N 79°38'10.7"E [2]ஆகும். இங்கு 1911 குடும்பங்களும் 7438 [3] மக்களும் வசிக்கின்றனர். இதில் 3676 ஆண்களும் 3762 பெண்களும் அடங்குவர். இக் கிராமத்தின் மொத்த புவிப்பரப்பு 298.65 ஹெக்டா் ஆகும். இக் கிராமத்தில் அரசு 4 தொடக்கப்பள்ளிகளும், 1 நடுநிலைப்பள்ளியும், உள்ளன. ஊராட்சி மன்ற அலுவலகம் இயங்கி வருகின்றது, அருகிலேயே கிராம நிர்வாக அலுவலகமும், நூலகமும் அமைந்துள்ளன. மேலும் இங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியும்,[4]அரசு மேல்நிலைப்பள்ளியும் உள்ளது. கோயில்கள்புலிவலத்தில் அப்பன் பெருமாள் வெங்கடாசலபதி அமைந்துள்ளது. இவ்வூரில் உள்ள அப்பன் பெருமானை பொதிகை மலையில் பூசை செய்து வழிபடுகிறார், திருமலை உள்ள புஷ்கரணியில் அகத்தியர் அப்பன் பெருமாள் விடுகிறார் பின்னர் குளததிலிருந்து அர்சகருக்கு அப்பன் பெருமாள் கிடைக்க பெருகிறார். தென்தேசத்தில் பிரதிஷ்டை செய்வதற்க்காக பரிவரங்களுடன் அப்பன் பெருமாள் எடுத்து வரப்படுகிறார். தென்தேசத்திற்க்கு வரும் அப்பன் பெருமாளை சோழ அரசர் எதிர்கொண்டு அழைக்கப்படுகிறார். பின்னர் அப்பன் பெருமாளை இத்தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.[5] தற்போது இக்கோயிலில் குடமுழுக்கு நடைபெற இருப்பதால் திருப்பணிகள் நடைப்பெற்று வருகின்றது. தட்சிணகோகர்ணேசுவரர் கோயில் (சிவன்) உள்ளது. மேலும் விநாயகர் கோயில்களும் இருந்து வருகின்றன. ஊர் பெயர் காரணம்விஷ்ணு திவேசியான ரிசியை புலியாக மாற நாரத முனிவர் சாபம் அளித்துவிடுகிறார். புலியாக மாறிய ரிசி சாப விமோச்சனம் பெற இவ்வவிடத்தில் உள்ள அப்பன் பெருமாளை சுற்றி (வலம்) வந்து வழிபட்டதால் சுய ரூபம் பெற்றார். புலி உருவத்துடன் இருந்த ரிசி அப்பன் பெருமான் கருணையால் சுய ரூபம் பெற்றதால் இவ்வூரை புலிவலம் என அழைக்க அருளினார். மேற்கோள்
|
Portal di Ensiklopedia Dunia