திண்டுக்கல் மாநகராட்சி
திண்டுக்கல் மாநகராட்சி (Dindigul Municipal Corporation) இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் மாவட்டமான திண்டுக்கல் மாவட்டத்தின் தலைநகராக உள்ள திண்டுக்கல் உள்ளாட்சி அமைப்பில் அமைந்துள்ள ஓர் மாநகராட்சியாகும். மாநிலத்தின் 11–வது மாநகராட்சியாக திண்டுக்கல் மாநகராட்சி 2014 ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி தரம் உயர்த்தப்பட்டது. இம்மாநகராட்சி 48 மாமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இந்த மாநகராட்சியின் ஆண்டு வரி வருவாய் 44 கோடி ரூபாய் ஆகும். தமிழக மாநகராட்சிகளிலேயே மிகக் குறைந்த வரி வருவாயைக் கொண்ட மாநகராட்சி இதுவே ஆகும்.[5] வரலாறுதிண்டுக்கல் நகராட்சிதிண்டுக்கல் நகராட்சி மன்றம் கி.பி.1866 நவம்பர் 1-ம் தேதி முதல் நகராட்சியாக செயல்படுகிறது. இந்த நகராட்சியை ஆங்கிலேயர் உருவாக்கினர்.கி.பி.1988-ம் ஆண்டு சிறப்புநிலை நகராட்சியாக தமிழக அரசு தரம் உயர்த்தியது. மிகவும் பழமை வாய்ந்த இந்த நகராட்சி உருவாகி 2016-ஆம் ஆண்டுடன் 150 ஆண்டுகள் ஆகின்றன.[6] மாநகராட்சியாக தரம் உயர்வுதிண்டுக்கல் நகராட்சி சிறப்பு நிலை நகராட்சியாக இருந்து வந்தது.மாநிலத்தின் 11–வது மாநகராட்சியாக திண்டுக்கல் மாநகராட்சி 2014 ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி தரம் உயர்த்தப்பட்டது.[7] மாநகராட்சி விரிவாக்கம்திண்டுக்கல் நகராட்சியில் முன்னர் நாகல்நகர், மேட்டுப்பட்டி, பேகம்பூர், முகமதியா புரம் ,சவேரியார் பாளையம், கோவிந்தாபுரம், ஆர்.எம்.காலனி, என்.ஜி.ஓ.காலனி, ரவுன்டு ரோடு, அசனாத் புரம் போன்ற பகுதிகள் இருந்தன. திண்டுக்கல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, நகரைச் சுற்றி அமைந்துள்ள பாலகிருஷ்ணாபுரம், பள்ளப்பட்டி, செட்டிநாயக்கன்பட்டி, குரும்பப்பட்டி, தோட்டனூத்து, அடியனூத்து உள்பட 10 ஊராட்சிகள் திண்டுக்கல் மாநகராட்சியுடன் இணைந்துள்ளன.[8][9] மாநகராட்சி
சிறந்த மாநகராட்சிக்கான விருது2016 ஆம் ஆண்டு 70 ஆவது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்வர் விருதுகள் வழங்கப்பட்டன.இதில் சிறந்த மாநகராட்சிக்கான விருது திண்டுக்கல் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது.விருதுடன் ரூபாய் 25 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது.[10] மேலும், வந்த முதல் ஆண்டில் சிறந்த மாநகராட்சி விருதை பெற்ற பெருமை திண்டுக்கல் மாநகராட்சியையே சேரும். மாநகராட்சி தேர்தல், 20222022-ஆம் ஆண்டில் திண்டுக்கல் மாநகராட்சியின் 48 மாமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் திமுக கூட்டணி 37 வார்டுகளையும், அதிமுக 5 வார்டுகளையும், பாரதிய ஜனதா கட்சி 1 வார்டையும், சுயேச்சைகள் 5 வார்டுகளையும் கைப்பற்றினர். மேயர் மற்றும் துணை மேயராக திமுகவின் இளமதி மற்றும் இராஜப்பா தேர்வு செய்யப்பட்டனர்.[11] இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia