கும்பகோணம் மாநகராட்சி
கும்பகோணம் மாநகராட்சி (Kumbakonam City Corporation) என்பது இந்தியாவில் தென்மாநிலமான தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கும்பகோணம் மாநகராட்சியின் தலைமையிடம் ஆகும். தமிழ்நாட்டின் 16-வது மாநகராட்சியாக 24.08.2021 அன்று தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் தமிழக முதலமைச்சர் அறிவித்தார். 15 அக்டோபர் 2021 அன்று 16-வது மாநகராட்சியாக கும்பகோணம் மாநகராட்சியை நிறுவ தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது.[1][2] கும்பகோணம் நகராட்சிகும்பகோணம் 1866-ம் ஆண்டு முதல் நகராட்சியாகச் செயல்பட்டு வருகிறது. 4.96 சதுர மைல் பரப்பளவு கொண்ட இந்நகரில் 2011-ம் ஆண்டு கணக்கின்படி 1,40,113 பேர் 45 வார்டுகளில் வசித்து வருகின்றனர். 1866-ம் ஆண்டு மூன்றாம் நிலையாகவும், 1949 -லிருந்து முதல் நிலையாகவும், 1974-லிருந்து தேர்வு நிலை நகராட்சியாகவும், 1998 முதல் சிறப்பு நிலை நகராட்சியாகவும் செயல்பட்டு வருகிறது.
மாநகராட்சிப் பகுதிகள்புதிதாக உருவாக்கப்பட்ட கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் கும்பகோணம் நகராட்சி, தாராசுரம் பேரூராட்சி, வலையப்பேட்டை ஊராட்சியின் பகுதிகள், பாபுராஜபுரம் ஊராட்சியின் பகுதிகள், அசூர் ஊராட்சியின் பகுதிகள் , பழவந்தான்கட்டளை ஊராட்சி, பெருமாண்டி ஊராட்சி முழுமையாக, கொரநாட்டுக்கருப்பூர் ஊராட்சி முழுமையாக, சாக்கோட்டை ஊராட்சி முழுமையாக, உமாமகேஸ்வரபுரம் ஊராட்சியின் பகுதிகள், தேப்பெருமாநல்லூர் ஊராட்சியின் பகுதிகள், ஏராகரம் ஊராட்சியின் பகுதிகள் மற்றும் மலையப்பநல்லூர் ஊராட்சியின் பகுதிகளைக் கொண்டது. மாநகராட்சி பரப்பளவுகும்பகோணம் நகராட்சி-யாக செயல்பட்டபோது சுமார் 12.58 சதுர கிலோமீட்டர் ஆக இருந்தது. தற்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் இதன் பரப்பளவு சுமார் 42.95 சதுர கிலோ மீட்டராக உள்ளது. மற்றும் 48 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது மாநகராட்சி தேர்தல், 20222022-ஆம் ஆண்டில் இம்மாநகராட்சியின் 48 மாமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் திமுக கூட்டணி 42 வார்டுகளையும், அதிமுக 3 வார்டுகளையும், சுயேச்சைகள் 3 வார்டுகளையும் கைப்பற்றினர். மேயர் மற்றும் துணை மேயர் மறைமுக தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் கே. சரவணன் மற்றும் திமுகவின் தமிழழகன் துணை மேயராக வெற்றி பெற்றனர்.[3] சுற்றுலா & ஆன்மீகத் தலங்கள்கும்பகோணம் நகரத்தின் மையத்தில் ஆதிகும்பேசுவர சுவாமி கோயில் அமைந்துள்ளது.
இதனையும் காண்கமேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia