இது மலப்புரம் நகராட்சியும், அதன் அருகில் உள்ள நகராட்சிகளையும், மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரங்களையும் கொண்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பகுதியில் 1.7 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இன்னும் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படாத, பத்து இலட்சத்துக்கும் கூடுதலான நகர்ப்புற ஒருங்கிணைப்பைக் கொண்ட கேரளத்தின் ஒரே நகரமாக இது உள்ளது. 2020 சனவரியில் நகர்ப்புற வளர்ச்சியின் அடிப்படையில் எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் (EIU) நடத்திய ஆய்வின்படி, 2015 மற்றும் 2020 இக்கு இடையில் 44.1% நகர்ப்புற வளர்ச்சியுடன் இது உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பெருநகரப் பகுதியாக உள்ளது. [4] 2011 ஆம் ஆண்டு நிலவரப்படி, மலப்புறம் பெருநகரப் பகுதியில் கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 94.14% என்று உள்ளது. இது தேசிய நகர்ப்புற கல்வியறிவு விகித சராசரியான 85% ஐ விட அதிகமாகும்.
நகர்ப்புற ஒருங்கிணைப்பின் பகுதிகள்
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மலப்புரம் பெருநகரப் பகுதி பின்வரும் பகுதிகளை உள்ளடக்கியது: [5]
மலப்புரம் மாநகர வரைபடம் முன்மொழியப்பட்ட மாநகராட்சி எல்லைகளைக் காட்டுகிறது
மலப்புறம் மட்டுமே, அதன் வரம்பிற்குள் எந்த மாநகராட்சியும் இல்லாத கேரளத்தின் பத்து இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட நகர்ப்புற ஒருங்கிணைப்பு (பெருநகரப் பகுதி) ஆகும். ஆனால், மலப்புரம் பகுதியில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து மலப்புரம் நகராட்சியைமாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. [6] முன்மொழியப்பட்ட மலப்புரம் மாநகராட்சியானது பின்வருவனவற்றை உள்ளடக்கியது: