மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களின் வலையமைப்பு
மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களின் வலையமைப்பு (மலாய்: Rangkaian Universiti-Universiti Teknikal Malaysia; ஆங்கிலம்: Malaysian Technical University Network) (MTUN) என்பது மலேசியாவின் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களின் ஒரு வலையமைப்பைக் குறிப்பிடுவதாகும். தற்போது மலேசியாவில் உள்ள நான்கு தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் இந்த வலையமைப்பில் உறுப்பியம் பெற்றுள்ளன.[1] முன்னர் இந்த அமைப்பு மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகக் கல்லூரிகளின் வலையமைப்பு (Technical University College Network of Malaysia) (TUCN) என்று அழைக்கப்பட்டது. இந்த அமைப்பு 2006-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.[2] பொதுபிப்ரவரி 2007 இல், மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகக் கல்லூரிகளின் வலையமைப்பு என்பது மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களின் வலையமைப்பு என மாற்றம் கண்டது. 2007-ஆம் ஆண்டில் மலேசியாவில் இயங்கிய நான்கு தொழில்நுட்பக் கல்லூரிகளின் தரநிலைகள், பல்கலைக்கழகத் தகுதிக்கு தரம் உயர்த்தப்பட்டதால், அவை ஒன்றிணைந்து இருந்த வலையமைப்பின் பெயரிலும் மாற்றம் ஏற்பட்டது.[3] தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள்
மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia