மலாயா வங்கி நிறுவனம்
மலாயா வங்கி நிறுவனம் (Malayan Banking Berhad, பங்கு வர்த்தகத்தில் மே பேங்க்) மலேசியாவைச் சேர்ந்த அனைத்துச் சேவைளையும் வழங்கும் தனியார் வங்கி நிறுவனமாகும். இது முதன்மையாக மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா பகுதிகளில் இயங்குகின்றது. பின்னணிமேபாங்க்கின் மொத்த பங்குகளின் மதிப்பின்படியும் மொத்த சொத்துக்களின் அடிப்படையிலும், இது மலேசியாவின் மிகப் பெரும் வங்கியாக விளங்குகின்றது. 2021ஆம் ஆண்டில் $201.84 பில்லியன் மொத்தச் சொத்துக்களையும் நிகர இலாபமாக $1.98 பில்லியன் கொண்டுள்ள இந்த வங்கி தெற்காசியாவில் உள்ள மிகப் பெரும் வங்கிகளில் ஒன்றாகவும் விளங்குகின்றது. உலகளவில் முதல் 1000 வங்கிகளில் 103வது நிலையிலும் (2014) போர்ப்சு குளோபலின் 2000 வங்கிகளின் பட்டியலில் 371வது இடத்திலும் (2015) உள்ளது. மலேசியப் பங்குச் சந்தையில் (புர்சா மலேசியா) பட்டியலிடப்பட்டுள்ள பெரிய நிறுவனமாகவும் உள்ளது. இதன் மொத்தப் பங்குகளின் மதிப்பு திசம்பர் 31, 2014இல் அமெரிக்க$ 24.4 பில்லியனாக இருந்தது. புளூம்பெர்கு நிறுவனம் இதனை முதல் 20 வலிமையான வங்கிகளில் ஒன்றாக மதிப்பிட்டுள்ளது.[2] மேபாங்கின் இசுலாமியத் துணை நிறுவனம், மேபாங்க் இசுலாமிக்கு, ஆசியா பசிபிக் மண்டலத்தில் உள்ள இசுலாமிய வங்கிகளில் முதலிடத்தில் மதிப்பிடப்படுகின்றது.[3] [4] இந்த வங்கியின் கிளைகள் 10 தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு நாடுகளிலும் முக்கிய ஆசிய நாடுகளிலும் பரந்துபட்டுள்ளது. இந்த வங்கி 2400 உலகளாவிய அலுவலகங்களுடனும் 47,000க்கும் கூடுதலான ஊழியர்களுடனும் இயங்கி வருகின்றது. மலாயா வங்கியின் கிளைகள் உள்ள நாடுகள்விவரங்களுடனான முழுமையான பட்டியல்:அனைத்து நாடுகள் பரணிடப்பட்டது 2016-02-16 at the வந்தவழி இயந்திரம் ஆசியா
ஆசியாவிற்கு வெளியேமேற்கோள்கள்
மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia