மலேசிய மக்களவைத் தலைவர் (மலாய்: Yang di-Pertua Dewan Rakyat; ஆங்கிலம்: Speaker of the Dewan Rakyat என்பவர் மலேசிய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவையை வழிநடத்தும் தலைவராகும். மலேசிய மக்களவையின் மிக உயர்ந்த பதவியகும்.
மலேசிய மக்களவையின் அமர்வுகளை கூட்டுவதற்கும்; விவாதங்களுக்கு ஏற்பாடு செய்வதற்கும்; மனுக்கள், மசோதாக்கள் மற்றும் திருத்தங்கள் ஆகியவற்றின் ஏற்புத் தன்மையை ஆய்வு செய்வதற்கும்; இவர் பொறுப்பு வகிக்கின்றார். மக்களவைத் தலைவர் இல்லாத காலத்தில், அவர்களின் பிரதிநிதிகளில் ஒருவர் பொறுப்பு வகிப்பார்.[3]
மக்களவையின் அமர்வு; மக்களவை எப்போது திறக்கப்பட வேண்டும்; மற்றும் மூடப்பட வேண்டும் என்பதை மக்களவையின் தலைவர் தீர்மானிக்கிறார்; தேவைப்பட்டால் மக்களவையை சிறிது காலத்திற்கு இடைநிறுத்தம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. மலேசிய அரசியலமைப்பு மற்றும் மக்களவையின் நிலையியல் கட்டளைகளுக்கு உரிய மரியாதை வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கும் பொறுப்பானவர் ஆவார்.
மக்களவை உறுப்பினர்களை ஒழுங்குபடுத்துதல்;
ஓர் அமர்வின் போது யார் பேசலாம் என்பதை தீர்மானித்தல்;
மக்களவை கூடும் போது குறைந்தபட்ச எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் உள்ளனரா என சரிபார்ப்பது;
மக்களவை வாக்கெடுப்பில் சமநிலை ஏற்படும் போது மட்டுமே அவர் வாக்களிப்பது;
கேள்வி நேரத்தின் போது துணைக் கேள்விகளை எழுப்புவதற்கு வரம்புகளை விதிப்பது;
கேள்வி நேரத்தின் போது வேறு கேள்விகளை தாக்கல் செய்வதைக் கட்டுப்படுத்துவது;