மலேசியாவின் பதின்மூன்றாவது மக்களவை, 2013–2018
மலேசியாவின் பதின்மூன்றாவது மக்களவை, 2013–2018 (மலாய்: Parlimen Malaysia ke-13; ஆங்கிலம்: 13-th Parliament of Malaysia (2013–2018) என்பது மலேசியக் கூட்டமைப்பின் பதின்மூன்றாவது மக்களவை ஆகும். 13-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் 28 ஏப்ரல் 24 சூன் 2013-இல் நடைபெற்றது.[2]2013-ஆம் ஆண்டு மலேசிய பொதுத்தேர்தல் (2013 Malaysian General Election) நடைபெற்ற பின்னர் பதின்மூன்றாவது மக்களவை கூடியது. மக்களவை தலைவராக பண்டிக்கார் அமின் மூலியார் தலைமை தாங்கினார். துணை மக்களவைத் தலைவர் ரொனால்டு கியாண்டி மற்றும் இசுமாயில் முகமது சையத் ஆகியோர் பொறுப்பு ஏற்றார்கள். எதிர்க்கட்சிகளின் தலைவர்களாக அன்வர் இப்ராகீம் (16 மார்ச் 2015 வரையில்); வான் அசிசா வான் இசுமாயில் ஆகியோர் பொறுப்பு வகித்தனர். இந்த மக்களவையில் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் அவர்களின் தலைமையிலான பாரிசான் நேசனல் கூட்டணி; 133 இடங்களைப் பெற்று ஆளும் கூட்டணியாக ஆட்சி அமைத்தது. எதிர்க்கட்சியினர் 89 இடங்களைப் பெற்றனர். பொது![]() ![]() மலேசியப் பொதுத் தேர்தல், 2013-இல் போட்டியிட்ட எதிர்க் கட்சிக்களான ஜனநாயக செயல் கட்சி (ஜசெக) மற்றும் மலேசிய இசுலாமிய கட்சி (பாஸ்) ஆகிய இரு முக்கியக் கட்சிகளுக்கும் இடையிலான தொடர் கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சிக் கூட்டணி கலைக்கப்பட்டது. ஒரு புதிய எதிர்க்கட்சி கூட்டணியான பாக்காத்தான் அரப்பான் கூட்டணி உருவானது. அதில் ஜனநாயக செயல் கட்சி, மக்கள் நீதிக் கட்சி மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட அமாணா ஆகியவற்றின் கூட்டமைப்பால் அந்தப் புதிய எதிர்க்கட்சி கூட்டணி அமைக்கப்பட்டது. புதிதாக உருவாக்கப்பட்ட அமாணா கட்சியில் பெரும்பாலோர் முன்னாள் மலேசிய இசுலாமிய கட்சியின் உறுப்பினர்களாகும்.[3] பாக்காத்தான் அரப்பான் கூட்டணிபல முன்னாள் அம்னோ உறுப்பினர்களும் மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி எனும் பெர்சத்து கட்சியை உருவாக்கினார்கள். 2018-ஆம் ஆண்டுப் மலேசியப் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கும், பாரிசான் நேசனல் கூட்டணிக்கு எதிராகச் செயல் படுவதற்கும் பாக்காத்தான் அரப்பான் கூட்டணியுடன் தேர்தல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். [4] 20 மார்ச் 2017 அன்று பெர்சத்து கட்சி அதிகாரப்பூர்வமாக பாக்காத்தான் அரப்பான் கூட்டணியில் ஓர் உறுப்பினரானது.[5] மக்களவை அமைப்பு (2013–2018)
![]() மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia