மலேசியாவின் மூன்றாவது மக்களவை 1971–1974 (மலாய்: Parlimen Malaysia Kedua (1971–1974) அல்லது Parlimen Malaysia ke-3; ஆங்கிலம்: 3rd Parliament of Malaysia (1971–1974) என்பது மலேசியக் கூட்டமைப்பின் மூன்றாவது மக்களவை ஆகும். 3-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் 20 பிப்ரவரி 1971-இல் நடைபெற்றது.[1]
1969 முதல் 1971 வரை, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்குப் பதிலாக தேசிய நடவடிக்கை மன்றம் (National Operations Council) நாட்டை ஆட்சி செய்தது. பிப்ரவரி 1971-இல் தேசிய நடவடிக்கை மன்றம் கலைக்கப்பட்டதும், மலேசியாவின் மூன்றாவது மக்களவை கூடியது.
பொது
1969-ஆம் ஆண்டு மலேசிய பொதுத்தேர்தல் (1969 Malaysian General Election) நடைபெற்ற பின்னர்; இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மூன்றாவது மக்களவை கூடியது. மக்களவை தலைவராக சையது அகமது அப்துல்லா (Syed Esa Alwee) 24 நவம்பர் 1972 வரையில் தலைமை தாங்கினார். அதன் பின்னர் அசிசூல் ரகுமான் அப்துல் அசீஸ் தலைமை தாங்கினார்.
இந்த மக்களவையில் முன்னாள் பிரதமர்துங்கு அப்துல் ரகுமான் (Tunku Abdul Rahman) அவர்களின் தலைமையிலான கூட்டணி; அதிக இடங்களைப் பெற்று ஆளும் கூட்டணியாக விளங்கியது. எதிர்க்கட்சிகளின் தலைவராக லிம் கிட் சியாங் பொறுப்பு வகித்தார்.
Abdullah, Z. G., Adnan, H. N., & Lee, K. H. (1997). Malaysia, tokoh dulu dan kini = Malaysian personalities, past and present. Kuala Lumpur, Malaysia: Penerbit Universiti Malaya.
Chin, U.-H. (1996). Chinese politics in Sarawak: A study of the Sarawak United People's Party. Kuala Lumpur: Oxford University Press.
Faisal, S. H. (2012). Domination and Contestation: Muslim Bumiputera Politics in Sarawak. Institute of Southeast Asian Studies.
Surohanjaya Pilehanraya Malaysia. (1965). Penyata pilehanraya-pilehanraya umum parlimen (Dewan Ra'ayat) dan dewan-dewan negeri, tahun 1964 bagi negeri-negeri Tanah Melayu. Kuala Lumpur: Jabatan Chetak Kerajaan.