மலேசியாவின் பதினோராவது மக்களவை, 2004–2008 (மலாய்: Parlimen Malaysia ke-11; ஆங்கிலம்: 11-th Parliament of Malaysia (2004-2008) என்பது மலேசியக் கூட்டமைப்பின் பதினோராவது மக்களவை ஆகும்.
11-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் 17 மே 2004-இல் நடைபெற்றது.[1]
மக்களவை தலைவராக முகமது சாகிர் இசுமாயில் (14 அக்டோபர் 2004 வரையில்); மற்றும் ரம்லி நிகா தாலிப் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். துணை மக்களவைத் தலைவர் லிம் சி செங்; யூசோப் யாகோப் ஆகியோர் பொறுப்பு ஏற்றார்கள். எதிர்க்கட்சிகளின் தலைவராக லிம் கிட் சியாங் பொறுப்பு ஏற்றார்.
இந்த மக்களவையில் முன்னாள் பிரதமர்அப்துல்லா அகமது படாவி அவர்களின் தலைமையிலான பாரிசான் நேசனல் கூட்டணி; 198 இடங்களைப் பெற்று ஆளும் கூட்டணியாக ஆட்சி அமைத்தது. எதிர்க்கட்சியினர் 21 இடங்களைப் பெற்றனர்.
Abdullah, Z. G., Adnan, H. N., & Lee, K. H. (1997). Malaysia, tokoh dulu dan kini = Malaysian personalities, past and present. Kuala Lumpur, Malaysia: Penerbit Universiti Malaya.
Chin, U.-H. (1996). Chinese politics in Sarawak: A study of the Sarawak United People's Party. Kuala Lumpur: Oxford University Press.
Faisal, S. H. (2012). Domination and Contestation: Muslim Bumiputera Politics in Sarawak. Institute of Southeast Asian Studies.
Surohanjaya Pilehanraya Malaysia. (1965). Penyata pilehanraya-pilehanraya umum parlimen (Dewan Ra'ayat) dan dewan-dewan negeri, tahun 1964 bagi negeri-negeri Tanah Melayu. Kuala Lumpur: Jabatan Chetak Kerajaan.