முன்னீர்பள்ளம்
முன்னீர்பள்ளம் (Munnirpallam) என்பது தமிழ்நாட்டின், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். அமைவிடம்இந்த ஊரானது மாவட்ட தலைநகரான திருநெல்வேலியிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலும், பாளையங்கோட்டையிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 655 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1] மக்கள் வகைபாடுஇந்த கிராமத்தில் 1,928 வீடுகள் உள்ளன. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 7,183 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 3,616 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 3567 என்றும் உள்ளது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 72.03% ஆகும். இதில் ஆண்களில் எழுத்தறிவு விகிதம் 77.26% என்றும், பெண்களிட் எழுத்தறிவு விகிதம் 66.87% ஆகும்.[2] இந்த ஊரின் எழுத்தறிவு விகிதமானது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும். ஊரில் உள்ள கோயில்கள்இந்த ஊரில் பரிபூரண கிருபேசுவரர் என்ற சிவன் கோயில் உள்ளது. இந்த ஊரில் பிறக்கும் ஆண் பிள்ளைகளுக்கு இந்த சிவனின் பெயரை வைப்பது வழக்கமாக உள்ளது.[3] ஊரைச் சேர்ந்த பிரபலங்கள்
மேற்கோள்
|
Portal di Ensiklopedia Dunia