இது வட்டாரம் என அழைக்கப்படும் 27 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு முதல் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு 27 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 18 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும், மொத்தம் 45 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[1][2]
தோற்றம்
1861 ஆம் ஆண்டில் வீதிக் குழு (Road Committee) என அழைக்கப்பட்ட உள்ளூராட்சிச் சபையைப் போன்றதொரு அமைப்பு யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டது. பின்னர், 1906 ஆம் ஆண்டில் மற்றும் 1898 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட 13 ஆம் இலக்கச் சட்டவிதிகளுக்கு அமைய முதலாவது உள்ளூராட்சிச் சபை (Local Board) உருவானது. 1921 ஆம் ஆண்டில் இது, நகரப்பகுதிச் சபை (Urban District Council) ஆகவும், பின்னர் 1940 இல், நகரசபையாகவும் தரம் உயர்த்தப்பட்டது. 1949 ஆம் ஆண்டில் இது மாநகரசபை ஆனது.
மாநகரசபைக் கட்டிடம்
யாழ்ப்பாணம் பிரதேச சபையில் உள்ள யாழ் மண்ணைப் பிரதிபலிக்கும் மரத்தினால் ஆன யாழ் சின்னம்
குடியேற்றவாதக் காலப் பாணியில் கட்டப்பட்ட யாழ்ப்பாண மாநகரசபைக்கான கட்டிடம், யாழ்ப்பாணக் கோட்டைக்கு அண்மையில் அமைந்திருந்தது. இங்கே சபை அலுவலகங்களுடன், நகரமண்டபமும் அமைக்கப்பட்டிருந்தது. 1980களின் இறுதியில், கோட்டையைச் சுற்றி இடம்பெற்ற போர் நடவடிக்கைகளினால் இக் கட்டிடம் முற்றாகவே அழிந்து விட்டது. இதனைத் தொடர்ந்து மாநகரசபையின் அலுவலகம் நல்லூருக்குத் தற்காலிக இடமொன்றுக்கு மாற்றப்பட்டது. எல்லா வசதிகளும் அடங்கிய புதிய கட்டிடமொன்றைக் கட்டுவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டதாயினும், நாட்டிலிருந்த குழப்ப நிலை காரணமாக இது நிறைவேறவில்லை.
வட்டாரங்கள்
யாழ் மாநகரசபையில் தற்போது (2018) 27 தனி வட்டாரங்கள் உள்ளன.[3][4] வட்டாரம் ஒவ்வொன்றும் ஒரு எண்ணாலும், ஒரு பெயராலும் குறிப்பிடப்படுகின்றன. விபரங்கள் பின்வருமாறு:[5]
2003 சனவரியில், இலங்கை அரசு அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி யாழ்ப்பாண மாநகர சபையைக் கலைத்து, உள்ளூர் பகுதியை நிர்வகிக்க சிறப்பு ஆணையர்களை நியமித்தது.[11][12][13][14] 2009 தேர்தல்கள் வரை மாநகரசபை சிறப்பு ஆணையர்களால் தொடர்ந்து நிர்வகிக்கப்பட்டது.
யாழ் மாநகரசபையின் 2021 ஆம் ஆண்டிற்கான நிதியறிக்கை இரண்டுமுறை தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, இம்மானுவேல் ஆர்னோல்ட் முதல்வர் பதவியை இழந்தார். இதனை அடுத்து 2020 திசம்பர் 30 அன்று இடம்பெற்ற முதல்வர் பதவிக்கான தேர்தலில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (ததேமமு) உறுப்பினர் வி. மணிவண்ணன் புதிய முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மணிவண்ணன் 21 வாக்குகளையும், ஆர்னோல்ட் 20 வாக்குகளையும் பெற்றனர். மணிவண்ணனுக்கு ஆதரவாக ததேமமு உறுப்பினர்கள் 10 பேரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 10 உறுப்பினர்களும், இலங்கை சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் வாக்களித்தனர்.[20]
2025 சூன் 13 அன்று இடம்பெற்ற யாழ் மாநகரசபைக்கான தலைவர்களுக்கான தேர்தலில், இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த திருமதி மதிவதனி விவேகானந்தராஜா 19 வாக்குகள் பெற்று முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை ஈபிடிபி (4), ஐக்கிய மக்கள் சக்தி (1), ஐக்கிய தேசியக் கட்சி (1) ஆகியவை ஆதரித்து வாக்களித்தன. எதிர்த்துப் போட்டியிட்ட அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசு வேட்பாளர் கனகையா சிறீகிருஷ்ணகுமார் 16 வாக்குகளைப் பெற்றார். பிரதி முதல்வராக இம்மானுவேல் தயாளன் (இதக) தெரிவு செய்யப்பட்டார்.[22]
↑Sarveswaran, K. (2005). The Tamil United Liberation Front: Rise and Decline of a Moderate Ethnic Party in Sri Lanka (1976-2000). New Delhi, India: ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம். p. 212.