வவுனியா மாநகர சபை
வவுனியா மாநகர சபை (Vavuniya Municipal Council, வவுனியா மாநகராட்சி மன்றம்) இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் உள்ள வவுனியா மாநகரப்பகுதிக்கு உரிய உள்ளூராட்சிச் சபை ஆகும். இந்த நகரசபையின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிக்குள் வீதிகள், சுகாதாரம், வடிகால்கள், வீடமைப்பு, நூலகங்கள், பொதுப் பூங்காக்கள், பொழுதுபோக்கு வசதிகள் போன்ற வசதிகளை வழங்குவதற்கு இச்சபை பொறுப்பாக உள்ளது. இந்த மாநகரசபைப் பகுதி 8 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு முதல் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, வவுனியா மாநகரசபைக்கு 12 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 9 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும், மொத்தம் 21 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[1][2][3] 2023 மார்ச் 20 முதல் வவுனியா நகரசபை மாநகரசபையாக வர்த்தமானி அறிவித்தல் 2296/05 மூலம் தரமுயர்த்தப்பட்டது.[4] இதற்கான முதலாவது தேர்தல் 2025 மே 6 அன்று நடத்தப்பட்டது. வரலாறு1880 காலப்பகுதியில், தற்போதைய வவுனியா நகரம், வன்னிவிளான் குளத்தையும், பிள்ளையார் கோவிலுடன் கூடிய சிறிய குடியிருப்பு பகுதியையும் உள்ளடக்கிய ஒரு சிறிய நகரமாக இருந்தது. 1931 டொனமூர் அரசியலமைப்பு சீர்திருத்தத்தின்படி, 1938 இல் முல்லைத்தீவில் இருந்த அரசுக் கச்சேரி வவுனியாவிற்கு மாற்றப்பட்டது. வவுனியா கிராமசபை 1946-இல் நகரசபையாகத் தரமுயர்த்தப்பட்டது. வவுனியா நகரசபையின் முதலாவது தலைவராக முகாந்திரம் பொன் தர்மலிங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர், எஸ். சுப்பிரமணியம் 1955 முதல் 1964 வரை தலைவராகப் பணியாற்றினார். நகரசபை 22.5 கிமீ பரப்பளவைக் கொண்ட நகரசபை 10 மண்டலங்களாக அல்லது வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டது.[5] வட்டாரங்கள்26ம் இலக்க 2015 ஆகத்து 21 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் உள்ளுராட்சி அதிகார சபைகள் தேர்தல் கட்டளை சட்டத்தின் 3ஆவது பிரிவின் கீழ் உள்ளுராட்சி அதிகார சபையின் ஆளுகைப் பிரதேசத்தின் எல்லைகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு வரையறை செய்யப்பட்டுள்ள வவுனியா நகரசபையின் ஆளுகைப் பிரதேசம் 10 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[3][6]
நகரசபைத் தேர்தல் முடிவுகள்1983 நகரசபைத் தேர்தல்18 மே 1983 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[7]
2009 நகரசபைத் தேர்தல்18 மே 1983 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[8]
2018 நகரசபைத் தேர்தல்2018 பெப்ரவரி 10 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் முதல் தடவையாகக் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, 12 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 9 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 21 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[1][2] தேர்தல் முடிவுகள் வருமாறு:[6]
2018 தேர்தலில் வவுனியா நகரசபையின் தலைவராக இராசலிங்கம் கௌதமன் (தமிழர் விடுதலைக் கூட்டணி), துணைத் தலைவராக சுந்தரம் குமாரசாமி (சின்னப்புதுக்கும்ம, இலங்கை சுதந்திரக் கட்சி) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.[6] மாநகர சபைத் தேர்தல் முடிவுகள்2025 மாநகரசபைத் தேர்தல்2025 மே 6 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[9] 12 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 9 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 21 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
2025 தேர்தலில் வவுனியா மாநகரசபையின் முதல்வராக சுந்தரலிங்கம் காண்டீபன் (சனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி), துணை முதல்வராக பரமேசுவரன் கார்த்தீபன் (சனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.[10] இவற்றையும் பார்க்ககுறிப்புகள்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia