திருகோணமலை மாநகர சபை

திருகோணமலை மாநகரசபை
Trincomalee Municipal Council
வகை
வகை
வரலாறு
தோற்றுவிப்பு3 மார்ச் 2023 (2023-03-03)
முன்புதிருகோணமலை நகரசபை
கட்டமைப்பு
உறுப்பினர்கள்25
ஆட்சிக்காலம்
5 ஆண்டுகள்
தேர்தல்கள்
கலப்புத் தேர்தல்
அண்மைய தேர்தல்
6 மே 2025
வலைத்தளம்
திருகோணமலை மாநகரசபை

திருகோணமலை மாநகரசபை (Trincomalee Municipal Council), (முன்னர் திருகோணமலை நகரசபை) இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திருகோணமலை நகரப்பகுதிக்கு உரிய உள்ளூராட்சிச் சபை ஆகும்.[1] இந்த மாநகரசபையின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிக்குள் வீதிகள், சுகாதாரம், வடிகால்கள், வீடமைப்பு, நூலகங்கள், பொதுப் பூங்காக்கள், பொழுதுபோக்கு வசதிகள் போன்ற வசதிகளை வழங்குவதற்கு இச்சபை பொறுப்பாக உள்ளது. இந்த மாநகரசபைப் பகுதி 12 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முன்னர் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் தனித்தனியாகப் பிரதிநிதிகள் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டனர். 2018 ஆம் ஆண்டு முதல் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, திருகோணமலை மாநகரசபைக்கு 15 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 10 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும், மொத்தம் 25 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[1]

2023 மார்ச் 19 முதல் திருகோணமலை நகரசபை மாநகரசபையாகத் தரமுயர்த்தப்பட்டது.[1] இதற்கான முதலாவது தேர்தல் 2025 மே 6 அன்று நடத்தப்பட்டது.

வட்டாரங்கள்

திருகோணமலை மாநகரசபைக்கு பின்வரும் 12 வட்டாரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன:[2]

  1. அபயபுரம் (2 உறுப்பினர்கள்)
  2. முருகாபுரி (2 உறுப்பினர்கள்)
  3. பாலையூற்று
  4. சிங்கபுரம் (2 உறுப்பினர்கள்)
  5. திருக்கடலூர்
  6. பெருந்தெரு
  7. சிவபுரி
  8. உவர்மலை
  9. தில்லைநகர்
  10. சோனகவாடி
  11. மனயாவெளி
  12. வில்லூண்டி

திருகோணமலை நகரசபைத் தேர்தல்கள்

1983 உள்ளூராட்சித் தேர்தல்கள்

18 மே 1983 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[3]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி 10,940 69.58% 9
  ஐக்கிய தேசியக் கட்சி 2,542 16.17% 2
  சிறீலங்கா சுதந்திரக் கட்சி 2,135 13.58% 1
  அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 106 0.67% 0
செல்லுபடியான வாக்குகள் 15,723 100.00% 12
செல்லாத வாக்குகள் 77
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 15,800
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 24,529
வாக்குவீதம் 64.41%

2006 உள்ளூராட்சித் தேர்தல்கள்

30 மார்ச் 2006 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[4]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16,368 75.06% 10
சுயேச்சை 4,286 19.65% 2
  மக்கள் விடுதலை முன்னணி 895 4.10% 0
  ஈழ மக்கள் சனநாயகக் கட்சி 259 1.19% 0
செல்லுபடியான வாக்குகள் 21,808 100.00% 12
செல்லாத வாக்குகள் 935
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 22,743
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 36,961
வாக்குவீதம் 61.53%

2011 உள்ளூராட்சித் தேர்தல்கள்

17 மார்ச் 2011 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[5]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11,601 59.43% 8
  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 4,137 21.19% 2
  ஐக்கிய தேசியக் கட்சி 2,044 10.47% 1
  மக்கள் விடுதலை முன்னணி 519 2.66% 1
அகில இலங்கைத் தமிழர் ஐக்கிய முன்னணி 463 2.37% 0
  சுயேச்சைக் குழு 1 419 2.15% 0
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 327 1.68% 0
  சுயேச்சைக் குழு 2 10 0.05% 0
செல்லுபடியான வாக்குகள் 19,520 100.00% 12
செல்லாத வாக்குகள் 560
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 20,080
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 31,927
வாக்களித்தோர் 62.89%

2018 உள்ளூராட்சித் தேர்தல்கள்

2018 பெப்ரவரி 10 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் முதல் தடவையாகக் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, 14 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 10 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 24 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்தல் முடிவுகள் வருமாறு:[2]

கூட்டணிகளும்
கட்சிகளும்
வாக்குகள் % வட்டாரங்களில்
இருந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினர்கள்
பெற்ற
வாக்குகளுக்குரிய
கூடுதல் உறுப்பினர்கள்
உரித்தான முழு
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
  இலங்கைத் தமிழரசுக் கட்சி 8,832 37.48% 9 0 9
  இலங்கை பொதுசன முன்னணி 3,171 13.46% 4 0 4
  ஐக்கிய தேசியக் கட்சி 1,923 8.16% 1 1 2
  அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 1,860 7.89% 0 2 2
  சுயேச்சைக் குழு 1,700 7.21% 0 2 2
  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 1,193 5.06% 0 1 1
  சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு 1,164 4.94% 0 1 1
தமிழர் சமூக சனநாயகக் கட்சி 1,140 4.84% 0 1 1
அகில இலங்கை மக்கள் காங்கிரசு 810 3.44% 0 1 1
  தமிழர் விடுதலைக் கூட்டணி 784 3.33% 0 1 1
  மக்கள் விடுதலை முன்னணி 553 2.35% 0 0 0
  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 437 1.85% 0 0 0
செல்லுபடியான வாக்குகள் 23,567 100.00% 14 10 24
செல்லாத வாக்குகள் 444
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 24,011
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 31,164
வாக்குவீதம் 77.05%

திருகோணமலை நகரசபைக்குத் தலைவராக நாகராசா ராசநாயகம், துணைத் தலைவராக சேனாதிராசா சிறிஸ்கந்தராஜா (இதக) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[2]

திருகோணமலை மாநகரசபைத் தேர்தல்கள்

2025 உள்ளூராட்சித் தேர்தல்கள்

திருகோணமலை மாநகரசபைக்கான முதலாவது தேர்தல் 2025 மே 6 அன்று இடம்பெற்றது. தேர்தல் முடிவுகள்:[6] 15 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 10 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 25 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கூட்டணிகளும்
கட்சிகளும்
வாக்குகள் % வட்டாரங்களில்
இருந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினர்கள்
பெற்ற
வாக்குகளுக்குரிய
கூடுதல் உறுப்பினர்கள்
உரித்தான முழு
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
  இலங்கைத் தமிழரசுக் கட்சி 8,495 36.27% 9 0 9
  தேசிய மக்கள் சக்தி 5,825 24.87% 3 3 6
சனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 3,500 14.94% 1 3 4
  சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு 2,435 10.40% 2 1 3
  ஐக்கிய தேசியக் கட்சி 503 2.15% 0 1 1
  சுயேச்சைக் குழு 2 747 3.19% 0 1 1
  சுயேச்சைக் குழு 3 514 2.19% 0 1 1
சர்வசன அதிகாரம் 394 1.68% 0 0 0
  அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 391 1.67% 0 0 0
  சுயேச்சைக் குழு 1 128 0.55% 0 0 0
  மக்கள் கூட்டணி 124 0.53% 0 0 0
செல்லுபடியான வாக்குகள் 23,421 100.00% 15 10 25
செல்லாத வாக்குகள் 406
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 23,827
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 38,338
வாக்குவீதம் 62.15%

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "Pradeshiya Sabha Act, No 15 of 1987" (PDF). இலங்கை அரசு. Retrieved 9 June 2025.{{cite web}}: CS1 maint: url-status (link)
  2. 2.0 2.1 2.2 "Local Authorities Election - 10.02.2018" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived (PDF) from the original on 12 May 2025. Retrieved 7 June 2025.
  3. Sarveswaran, K. (2005). The Tamil United Liberation Front: Rise and Decline of a Moderate Ethnic Party in Sri Lanka (1976-2000). Jawaharal Nehru University.
  4. "Local Authorities Election 2006 Final Results Trincomalee Urban Council". Department of Elections, Sri Lanka. Archived from the original on 2012-06-07. Retrieved 2017-03-18.
  5. "Local Authorities Election - 17.03.2011 Trincomalee District Trincomalee Urban Council". Department of Elections, Sri Lanka. Archived from the original on 2012-06-07. Retrieved 2017-03-18.
  6. "Local Authorities Election - 6.05.2025 Trincomalee District Trincomalee Municipal Council" (PDF). Department of Elections, Sri Lanka. Retrieved 9 June 2025.{{cite web}}: CS1 maint: url-status (link)

இவற்றையும் பார்க்கவும்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya