லோகநாதப் பெருமாள் கோவில், திருக்கண்ணங்குடி
லோகநாதப் பெருமாள் கோவில், தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிக்கலுக்கு அருகில், திருக்கண்ணங்குடி என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலாகும். இக்கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று.[1] மேலும் இது பஞ்சகிருஷ்ண தலங்களிலும் ஒன்றாகும். அமைவிடம்இக்கோவில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்கண்ணங்குடியில் அமைந்துள்ளது. நாகப்பட்டினம்–திருவாரூர் சாலையில் நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவிலும் சிக்கலில் இருந்து 2 கி.மீ. தூரத்திலும் இந்தக் கோவில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 33 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 10°45'23.7"N, 79°45'48.7"E (அதாவது, 10.756584°N, 79.763521°E) ஆகும். கோவில்பரந்த வளாகத்தில் 5 அடுக்கு இராஜ கோபுரத்துடன் இக்கோவில் அமைந்துள்ளது.[2]
லோகநாதப் பெருமாள். இவர் சியாமளமேனிப் பெருமாள்என்றும் அழைக்கப்படுகிறார். பெருமாள் இங்கு நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறார்.
லோகநாயகி தாயார்.
மகிழம்
ராவண புஷ்கரணி தீர்த்தம், தல வரலாறுவசிஷ்ட முனிவர் வெண்ணெயால் கிருஷ்ண விக்கிரகம் செய்து வழிபட்டு வந்தார். அவரது ஆழ்ந்த பக்தியின் காரணமாக அந்த விக்கிரகம் உருகாமல் இருந்து வந்தது. ஒரு நாள் கிருஷ்ணர் சிறுவனாக வசிஷ்டரின் வீட்டுக்குள் நுழைந்து வெண்ணெய் விக்கிரகத்தைச் சாப்பிட்டு விட்டு வெளியே ஓடினார். ஓடிய சிறுவனைத் துரத்திச் சென்றார் வசிஷ்டர். சிறுவன் ஓடிய வழியில் ஒரு மகிழ மரத்தடியில் சில முனிவர்கள் அமர்ந்து கிருஷ்ணரைத் தியானம் செய்துகொண்டிருந்தனர். ஓடிவந்த சிறுவன் கிருஷ்ணரே என அவர்கள் புரிந்து கொண்டனர். சிறுவனாய் வந்த கிருஷ்ணர் அவர்களின் பக்தியில் மகிழ்ந்து, அவர்களுக்கு ஒரு வரம் தருவதாகச் சொல்ல, அவர்கள் கிருஷ்ணரை அவ்விடத்திலேயே தங்கிவிடுமாறு வேண்டினர். அவரும் அங்கேயே தங்கிவிட்டார். துரத்தி வந்த வசிஷ்டரும் கிருஷ்ணர் நடத்திய லீலையை அறிந்து கொண்டார். இந்நிகழ்வு நடந்ததாகக் கூறப்படும் இடம்தான் திருக்கண்ணன்குடி. அவ்விடத்தில் லோகநாதப் பெருமாள் கோவில் கோபுரத்துடன் எழுப்பப்பட்டது. மங்களாசாசனம்திருமங்கை ஆழ்வார் இத்தலத்தை 10 பாசுரங்களில் (1748-1757) பாடியுள்ளார். பஞ்சகிருஷ்ண தலங்கள்தமிழ்நாட்டிலுள்ள பஞ்சகிருஷ்ண தலங்களில் இத்தலமும் ஒன்று. ஏனைய நான்கு தலங்கள் கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை ஆகிய ஊர்களிலுள்ள பெருமாள் கோவில்கள் ஆகும்.
மேற்கோள்கள்வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia