சாஞ்சி தூபி எண் 2
![]() சாஞ்சி தூபி எண் 2 (Stupa No.2) பௌத்த தூபிகளில் மிகவும் பழைமையானது. கிமு இரண்டாம் நூற்றாண்டு காலத்திய இத்தூபி சாஞ்சி பௌத்த தொல்லியல் வளாகத்தில் உள்ளது. 1849 - 1851 முடிய பிரித்தானிய தொல்பொருள் அறிஞர் மேஜர் அலெக்சாண்டர் கன்னிங்காம் மற்றும் லெப்டினண்ட் மேய்சி ஆகிய இருவரும் இணைந்து, சாஞ்சியின் இப்பௌத்த தொல்லியல்களத்தின் தூபி எண் 2ல் அகழாய்வு செய்து அறிக்கை வெளியிட்டனர்.[1] அமைவிடம்![]() சாஞ்சி பௌத்த தொல்லியல் களத்தின் பெரிய தூபிக்குப் பின்னர் இரண்டாவதான இத்தூபி நிறுவப்பட்டது. இவ்விரண்டாம் தூபி மௌரியப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் (கிமு 323-185) கிமு இரண்டாம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. இந்த இரண்டாம் தூபி, இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ராய்சென் மாவட்டத்தில் உள்ள சாஞ்சி முக்கியத்தூபி வளாகத்திற்கு மேற்கில் 300 மீட்டர் தொலைவில், சாஞ்சி மலையின் சாய்வில் அமைந்துள்ளது.[3] தூபி எண் 2 -தொல்பொருட்கள்![]() சாஞ்சி அகழாய்வின் போது தூபி எண் 2 அருகே கிடைத்த நான்கு சிறிய அழகிய பேழைகளில் எலும்புகள் கொண்டிருந்தது. பேழைகளில் பண்டைய பிராமி எழுத்துகளில், பௌத்த குருமார்களின் அஸ்திகள் இப்பேழைகளில் உள்ளது என குறிப்புகள் கொண்டிருந்தது. மேலும் இப்பேழைகளில், அசோகர் ஆதரவில் நடைபெற்ற மூன்றாம் பௌத்த சங்கத்தில் கலந்து கொண்டு, பின் இறந்து போன பத்து பௌத்த அறிஞர்களை எரித்த சாம்பலுடன் கூடிய எலும்புகள் உள்ளது என்ற குறிப்புகளும் கொண்டுள்ளது.[3] தொல்பொருட்களின் உள்ளடக்கம்சாஞ்சி தூபி எண் 2ன் சிற்பங்கள் கிமு 115 - கிமு 80 முடிய வரையிலான காலத்தில் செதுக்கப்பட்டது என ஆய்வில் அறியப்படுகிறது.[4] முந்தைய காலம் (கிமு 115)சாஞ்சி தூபி எண் 2ன் (கிமு115) தொல்பொருட்கள், இந்தியச் பாறைச் சிற்பக் கலையின் முன்னுதாரணமாக உள்ளது. [4][5][6] ![]() சாஞ்சி தூபி எண் 2ல் கண்டெடுக்கப்பட்ட குதிரைத் தலையுடன் கூடிய பெண் சிற்பம், மகாபோதி கோயில், புத்தகயாவில் உள்ள குதிரைத் தலை பெண் சிற்பத்துடன் ஒத்துப் போகிறது. இச்சிற்பங்கள் போதிசத்துவரின் ஜாதக கதைகளை விவரிக்கிறது எனக் கருதப்படுகிறது. [5] ![]() இத்தூபியின் 455 துண்டுச் சிற்பங்களில் 293 தாமரை மலர்ச் சிற்பங்களுடனும், பிற சிற்பங்கள் தாமரை மற்றும் பிற சிற்பங்களுடன் இணைந்தும் காணப்படுகிறது.[5] புத்தரின் வாழ்வில் நடைபெற்ற நான்கு முக்கிய நிகழ்வுகளை எடுத்துரைக்கும், நான்கு சிற்பங்கள் உலகில் முதல் முறையாக இத்தூபியில் சிற்பங்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.[8] காந்தாரச் சிற்பக் கலைஞர்கள்இத்தூபியில் உள்ள சிற்பங்கள், இந்தோ கிரேக்க நாட்டின் பகுதியான காந்தார சிற்பக் கலைஞர்களால், கிமு இரண்டாம் நூற்றாண்டின் இறுதிக் கால் நூற்றாண்டில், கிரேக்க-பௌத்த சிற்பக் கலைநயத்தில் வடிக்கப்பட்டுள்ளது. மேலும் தூபியின் கல்வெட்டுக்களில், காந்தாரி எழுத்தில் குறிப்புகள் உள்ளது.[9][9] கிமு 115ல் சுங்கப் பேரரசிற்கு வருகை புரிந்த இந்தோ கிரேக்க நாட்டின் தூதுவர் ஹெலியோடோரஸ் என்பவர், விதிஷாவில் ஒரு வெற்றித் தூணை நிறுவினார்.[10]
பிற்காலம் (கிமு 15)ஒரு நூற்றாண்டிற்குப் பின் கிமு 15ல் இரண்டாவது தூபியில் கூடுதல் சிற்பங்களைச் சேர்த்தும், பழைய சிற்பங்களை மறுசீரமைத்தும் உள்ளனர்.[3][5]
இதனையும் காண்கவெளி இணைப்புகள்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia