கோபிகா குகைக் கல்வெட்டு (Gopika Cave Inscription), இதனை மௌகரி மன்னர் இரண்டாம் அனந்தவர்மனின் நாகார்ஜுனி மலைக்குகை கல்வெட்டு என்றும் அழைப்பர். இக்கல்வெட்டு இந்தியாவின் பிகார் மாநிலத்தின் கயா மாவட்டத்தில் உள்ள பராபர் குகைகள் அருகே கோபிகா குகையில் கிபி 1788-இல் கண்டுபிடிக்கப்பட்டது.[2][3]கிபி 5 அல்லது 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட இந்த குகைகல்வெட்டு, சக்தி வழிபாட்டாளர்களின் துர்கை தெய்வத்தைப் போற்றி எழுதப்பட்ட கல்வெட்டாகும்.[4][5] 18-ஆம் நூற்றாண்டில் கோபிகா குகையை ஆய்வு செய்த தொல்லியல் அறிஞர்களுக்கு, கோபிகா குகையில் மௌகரி வ்மசத்தின் இரண்டாம் அனந்தவர்மன் நிறுவிய துர்கையின் கோயிலை கண்டுபிடிக்க முடியவில்லை. [4][6]
இடதுபுறத்தில் பாதி கல்வெட்டுகோபிகா குகை நுழைவாயிலின் வலது புறத்தில் கருங்கல் பாறையில் கல்வெட்டு
கோபிகா குகையின் நுழைவு நடைப்பாதையின் உள்ளே பாறைச் சுவரில் கல்வெட்டு செதுக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு 5 அடி நீளமும், 2 அடி அகலத்தில் குப்தர் கால சமஸ்கிருத எழுத்துமுறையில் மந்திர வடிவில் 10 வரிகள் கொண்டது. சமஸ்கிருத மொழியின் ஆரம்ப இந்தியக் கல்வெட்டுகளில் இதுவும் ஒன்றாகும்.
[7] கல்வெட்டு பாதுகாப்பாக இருப்பினும், இவ்விடத்தில் இருந்த துர்கை கோயிலை பராமரிப்பதற்கு மன்னரால் தானமாக வழங்கப்பட்ட கிராமங்களின் பெயர்கள் காணவில்லை. மேலும் கல்வெட்டின் இறுதியான பத்தாவரி வரி வேண்டுமென்றே சேதப்படுத்தப்பட்டுள்ளது.[8]
கோபிகா குகையின் பிந்தைய கால பிராமி எழுத்து கல்வெட்டை தேவநாகரி எழுத்தில் வரிக்கு வரி, 1785-இல் சார்லஸ் வில்கின்ஸ் என்பரால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.[9]
↑"I have thought it necessary to send a copy of part of the Gya inscription, which has been translated, together with the modern character written beneath it, as given by Dr. WILKINS" in Prinsep, James (1834). The Journal of the Asiatic Society of Bengal. Ed. by James Prinsep (in ஆங்கிலம்). Bapt. Miss. Press. p. 111.
↑Wilkins, Charles (1788). Asiatic Researches. London : Printed for J. Sewell [etc.] pp. 276-281.
↑Wilkins, Charles (1788). Asiatic Researches. London : Printed for J. Sewell [etc.] pp. 278-281.
ஆதார நூல்கள்
DR Bhandarkar; BC Chhabra; GS Gai (1981). Inscriptions of the Early Gupta Kings by JF Fleet, Corpus Inscriptionum Indicarum Volume III, 3rd Edition. Archaeological Survey of India. கணினி நூலகம்606389410.