காத்வா கல்வெட்டுக்கள்
![]() காத்வா கல்வெட்டுக்கள் (Gadhwa Stone Inscriptions, or Garhwa Stone Inscriptions), இந்தியாவின் அலகாபாத்தில் உள்ள் காத்வா கோட்டையில் கண்டெடுக்கப்பட்டது. கிபி 400 - 418 காலத்தைச் சேர்ந்த இக்கல்வெட்டுகள் குப்தப் பேரரசர்களான இரண்டாம் சந்திரகுப்தர் மற்றும் முதலாம் குமாரகுப்தன் காலத்தியது ஆகும். ஆர். எஸ். பிரசாத் என்பவரால் இக்கல்வெட்டுக்களை 1872-இல் அலகாபாத் அருகே அமைந்த காத்வா கோட்டை வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கல்வெட்டுக்கள் சமசுகிருத மொழியில் செதுக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுக்கள் மூலம் அந்தணர்கள், துறவிகள் மற்றும் ஆதரவற்ற ஏழைகளுக்கு உணவு அளிக்கும் சத்திரங்களுக்கு, இரண்டாம் சந்திரகுப்தர் மற்றும் முதலாம் குமாரகுப்தன் போன்ற குப்தப் பேரரசர்கள் தானமாக அளித்த நிலங்களைக் குறித்துள்ளது. [1][2][3]இக்கல்வெட்டுக்கள் 8, 10, 80 மற்றும் 90 என்ற எண்களைக் கொண்டுள்ளதுடன், பண்டைய பாடலிபுத்திரம் நகரத்தையும் குறித்துள்ளது.[4] மேற்கோள்கள்
ஆதார நூல்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia