அசோகரின் சிறு தூண் கல்வெட்டுகள்
அசோகரின் சிறு தூண் கல்வெட்டுகள் (Minor Pillar Edicts) பேரரசர் அசோகர் வட இந்தியாவின் சாரநாத், சாஞ்சி, கௌசாம்பி மற்றும் நேபாளத்தில் லும்பினி மற்றும் நிகாலி சாகர் ஆகிய நகரங்களில் நிறுவிய 5 சிறிய தூண் கல்வெட்டுகளாகும். [1] இக்கல்வெட்டுக்கள் அசோகரின் ஆட்சிக் காலமமான கிமு 262 - கிமு 233 இடைப்பட்ட காலத்தில் நிறுவப்பட்டது.[2] பிராமி எழுத்துகளைக் கொண்டு பிராமிருத மொழியில் பொறிக்கப்பட்ட அசோகரின் கல்வெட்டு ஆணைகளை ரூமிலா தாப்பர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நூலாக வெளியிட்டுள்ளார்.[1] அசோகரின் சிறு தூண் கல்வெட்டுகளின் பட்டியல்![]() கௌசாம்பியில் உள்ள அசோகரின் இராணியின் கல்வெட்டில், கௌதமபுத்தரிடமிருந்து பெற்ற அருளுக்காக இராணி பாரட்டப்பட வேண்டும் எனக்குறித்துள்ளார்.
கௌதம புத்தர் பிறந்த நேபாளத்தின் லும்பினி நகரத்திற்கு அசோகர் வருகை தந்தது குறித்து லும்பினி சிறு தூண் கல்வெட்டில் பொறித்துள்ளார்.
நேபாள நாட்டில் நிகாலி சாகர் எனுமிடத்தில் அசோகரின் சிறு தூண் கல்வெட்டில் கௌதம புத்தருக்கு எழுப்பிய பெருந் தூபியின் கட்டுமானத்தை குறித்துள்ளார். ![]() ![]() இதனையும் காண்க![]() ![]() ![]() ![]() ![]() ![]() மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia