வாடிப்பட்டி வட்டம்வாடிப்பட்டி வட்டம் , தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் ஒன்றாகும்.[1]மதுரை வருவாய் கோட்டத்தில் உள்ள இந்த வட்டத்தின் தலைமையகமாக வாடிப்பட்டி நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் ஏழு உள்வட்டங்களும், 77 வருவாய் கிராமங்களும் உள்ளன. வாடிப்பட்டி வட்டத்தில் தென்கரை உள்வட்டம், சோழவந்தான் உள்வட்டம், தனிச்சியம் உள்வட்டம், அலங்காநல்லூர் உள்வட்டம், பாலமேடு உள்வட்டம், முடுவார்பட்டி உள்வட்டம் மற்றும் நீரேத்தான் உள்வட்டம் என ஏழு உள்வட்டங்களைக் கொண்டுள்ளது. [2] இவ்வட்டத்தில் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மற்றும் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது. தென்கரை உள்வட்டம்தென்கரை உள்வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள்:
சோழவந்தான் உள்வட்டம்சோழவந்தான் உள்வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள்:
தனிச்சியம் உள்வட்டம்தனிச்சியம் உள்வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள்:
அலங்காநல்லூர் உள்வட்டம்அலங்காநல்லூர் உள்வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள்:
பாலமேடு உள்வட்டம்பாலமேடு உள்வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள்:
முடுவார்பட்டி உள்வட்டம்முடுவார்பட்டி உள்வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள்:
நீரேத்தான் உள்வட்டம்நீரேத்தான் உள்வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள்:
மக்கள்தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 60,844 வீடுகளும், 234,533 மக்கள்தொகையும் கொண்டது. மக்கள்தொகையில் 117,723 ஆண்கள் ஆகவும்; 116,810 பெண்கள் ஆகவும் உள்ளனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 77.48% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 992 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 945 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 53,254 மற்றும் 2,525 ஆகவுள்ளனர்.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia