திருவாதவூர் திருமறைநாதர் கோயில்
திருவாதவூர் திருமறைநாதர் கோயில் என்பது மதுரையிலிருந்து வடக்கே 25 கிலோமீட்டர் தொலைவிலும், மேலூரிலிருந்து மேற்கே எட்டு கி. மீ. தொலைவிலும் உள்ள திருவாதவூரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இக்கோயிலில் வேதநாயகி அம்மன் உடனுறை திருமறைநாதர் மூலவராக காட்சி அளிக்கிறார்.[1] . [2]. திருமறைநாதர் கோயிலின் குடமுழுக்கு விழா மார்ச் 18, 2014-இல் நடைபெற்றது. [3].[4] தல வரலாறுசிவபெருமான் சனி பகவானின் வாத நோயைத் தீர்த்த தலம் என்பதால், இந்தத்தலம் 'வாதவூர்' என்று பெயர் பெற்றது. இத்தல ஈசனை வழிபட்டால் கை, கால் முடம், பக்கவாதம் உள்ளிட்ட அனைத்து வகையான வாத நோய்களும் தீரும் என்று கூறப்படுகிறது. ஒரு சமயம் திருக்கயிலையில் பைரவரின் வாகனமான சுவானத்தை (நாய்) மறைக்கச் செய்தார் சிவபெருமான். இதனால் பைரவர், ஈசனிடம் தனது நாய் வாகனம் வேண்டினார். 'திருவாதவூர் சென்று வழிபட தொலைந்த வாகனம் கிடைக்கும்' என்று அருளினார். கயிலாய மலையில் இருந்து திருவாதவூர் வந்த பைரவர் இங்கு ஒரு தீர்த்தம் அமைத்தார். அது பைரவர் தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள பைரவர் தீர்த்தத்தில் நீராடி திருமறை நாதரை வழிபட்டு தனது நாய் வாகனத்தை மீட்டார். இத்தல பைரவரைத் தொடர்ந்து 8 அஷ்டமி தினங்களில் வழிபட்டு வந்தால் தொலைந்து வாகனங்கள் மீண்டும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இத்தல சனி, பைரவர் மற்றும் திருமறைநாதரை 5 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் சகல விதமான தோஷங்களும் அகன்றுவிடும். மகாவிஷ்ணுவின் காவல் தெய்வமாக ஸ்தாபிக்கப்பட்ட புருஷ மிருகத்துக்கு இங்கு சிலை உள்ளது. ஆலயத்தின் கிழக்கே நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. கோயில் அமைப்புஇங்கு தான் சிவபெருமான் தனது கால் சிலம்பொலியை மாணிக்கவாசகர் கேட்கச் செய்தார். இந்த மண்டபத்தை அமைத்தவர் மாணிக்கவாசகர். இங்கு மாணிக்கவாசகருக்கு தனி சன்னிதி உள்ளது. கரத்தில் திருவாசக சுவடி ஏந்தி கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். ஐந்து நிலைகள் உடைய ராஜகோபுரத்தை வணங்கி உள்ளே சென்றால் கருவறையில் திருமறைநாதர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பிரம்மதேவர் நடத்திய ஆரண கேத வேள்வியில் நீலதிருமேனியாக அம்பிகை இங்கு தோன்றினாள். எனவே அம்பிகையின் பெயர் ஆரணவல்லி என்று அழைக்கப்படுகிறது. மகாவிஷ்ணுவின் காவல் தெய்வமாக ஸ்தாபிக்கப்பட்ட புருஷ மிருகத்துக்கு இங்கு சிலை உள்ளது. ஆலயத்தின் கிழக்கே நாயக்க மன்னர்களால் கட்டப்பட்ட நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. கோயிலின் சிறப்புதிருமறை நாதர் கோவில் தொன்மை மிக்க சிவ வழிபாட்டுத்தலம் ஆகும். இக்கோவிலின் நூற்றுக்கால் மண்டபம், சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகரால் அமைக்கப்பட்டது என்பர். இந்த மண்டபத்தின் கொடுங்கைகள் சிற்பநுட்பம் வாய்ந்தவை. மூலவரின் கருவறைச் சுவர்கள் சிற்ப வேலைப்பாடுமிக்கவை. இங்கு அனுக்ஞை விநாயகர் சந்நிதி அருகிலுள்ள ஆறுகால் மண்டபம் ‘கொடுங்கைகளுக்‘குப் புகழ் பெற்றதாகும். நடராசருக்கென அழகிய சந்நிதி உள்ளது. அம்மனின் சந்நிதியிலுள்ள கொடுங்கைகளும் வேலைப்பாடுமிக்கவை. [5]. தல மரம் மற்றும் தீர்த்தம்தல மரம் மகிழ மரமாகும். சனி பகவான் தனிச் சன்னிதியில் ஒரு காலை மடக்கி அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். தனது வாகனத்தின் அருகில் பைரவர் உள்ளார். ஆலயத்தின் உள்ளே கபில தீர்த்தம் என்ற கிணறு உள்ளது. இறைவனின் அபிஷேகத்திற்கு இந்த நீர்தான் உபயோகப்படுத்தப்படுகிறது. பிற சன்னதிகள்சிந்தாமணி விநாயகர், காளீஸ்வரர், விஸ்வநாதர், நடராஜர், வியாக்கிரபாதர், பதஞ்சலி, மாணிக்கவாசகர் மற்றும் சுந்தரருக்கு தனி சன்னிதிகள் உள்ளன. கோயில் காவல் தெய்வம்
மாணிக்கவாசகர் கோயில் திருமறைநாதர் கோயிலுக்கு வெளியில் பிரதான சாலையில், சற்று தொலைவில் மாணிக்கவாசகர் பிறந்த இடம் உள்ளது. அங்கு மாணிக்கவாசகருக்கு சிறிய கோயில் உள்ளது. திருவிழாக்கள்
அருகில் உள்ள கோயில்கள்இதனையும் காண்கதிருமறைநாதர் கோயில் படத்தொகுப்பு
மாணிக்கவாசகர் கோயில் படத்தொகுப்பு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia