வி. ரவிச்சந்திரன்
விசுவநாதன் ரவிச்சந்திரன் ( வேணு ரவிச்சந்திரன் என்றும் அழைக்கப்படுகிறார்)[1] என்பவர் இந்தியாவின், தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள ஒரு இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட விநியோகத்தர் ஆவார். இவர் தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான ஆஸ்கார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனரும், உரிமையாளரும் ஆவார்.[2] இவரது நிறுவனம் முன்பு ஆஸ்கார் பிலிம்ஸ் என்று அழைக்கப்பட்டது.[3] ரவிச்சந்திரன் தனது திரைப்படத் தயாரிப்பு வாழ்கையை 1998 ஆம் ஆண்டில் காதலுக்கு மரியாதை படத்தின் இணை தயாரிப்பாளராக ஆனதில் இருந்து தொடங்கினார். இவர் பல பெரிய அளவிலான தமிழ் மொழித் திரைப்படங்களைத் தயாரித்தார். மேலும் தென்னிந்தியா முழுவதும் பல ஆங்கிலப் படங்களை விநியோகிக்கித்தார். துவக்ககால வாழ்க்கைஇவர் வேலூரில் பிறந்தார். ஊரிசு கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தார். இவரது சகோதரர்கள் சிறிய தயாரிப்பு நிறுவனங்களான செலிபிரிட்டி பிக்சர்ஸ், விஸ்வாஸ் பிக்சர்ஸ் ஆகியவற்றைக் கொண்டிருந்தனர். வேலூரில் ஒரு முன்னணி விநியோகத்தரின் மகன் என்பதால் இவர் தன் 16 வயதிலிருந்தே படங்களை விநியோகிக்கத் தொடங்கினார். தொழில்திரைப்பட தயாரிப்பாளராக தடம் பதிப்பதற்கு முன்பு, ரவிச்சந்திரன் 1970 களின் பிற்பகுதியிலிருந்து தமிழ் திரைப்படத்துறையில் ஒரு முன்னணி திரைப்பட விநியோகத்தராக இருந்தார். மேலும் தமிழ்நாடு முழுவதும் ஜாக்கி சான் படங்களை விநியோகத்தின் மூலம் கவனத்தை ஈர்த்தார்.[4] ரவிச்சந்திரன் சங்கிலி முருகனுடன் இணைந்து தயாரித்த ஃபாசிலின் காதல் நடகத் திரைப்படமான காதலுக்கு மரியாதை (1997) மூலம் திரைப்படத் தயாரிப்பாளராக அறிமுகமானார். படத்தின் மலையாள பதிப்பை முதலில் தயாரிக்க ஃபாசில் இவருக்கு வாய்ப்பளித்தாலும், ரவிச்சந்திரன் தனது முதல் தயாரிப்பு தமிழில் இருக்க வேண்டும் என்பதால் அதை மறுத்துவிட்டார். இந்தத் திரைப்படம் அந்த ஆண்டின் மிகவும் வெற்றிகரமான படங்களில் ஒன்றாக மாறியது. அதே நேரத்தில் இவரது இரண்டாவது தயாரிப்பாக, விக்ரமனின் குடும்ப நாடகப் படமான வானத்தைப் போல (2000), வணிகரீதியாக வெற்றியைப் பெற்றது.[4] இவரது மூன்றாவது மற்றும் நான்காவது படங்களான, எழிலின் குடும்ப நாடகப்படமான பூவெல்லாம் உன் வாசம் (2001) மற்றும் சசியின் காதல் திரைப்படமான ரோஜாக்கூட்டம் (2002) ஆகியவை, மிகவும் இலாபகரமான படங்களாக இருந்தன. 2012 ஆம் ஆண்டில், ரவிச்சந்திரன் மற்றும் இயக்குநர் சங்கர் ஆகியோர் விக்ரம் நடித்த காதல் பரபரப்பூட்டும் படமான ஐ (2015) படத்தின் வேலைகளைத் தொடங்கினார். எல்லா காலத்திலும் மிகவும் பொருட் செலவில் எடுக்கபட்ட தமிழ் படங்களில் ஒன்றாக ஐ படத்தை எடுக்கும் முயற்சியில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு அதை முடிக்க மூன்று ஆண்டுகள் ஆனது.[5] அதனைத் தொடர்ந்து அப்படத்தின் இசை வெளியீட்டு வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த நிகழ்வுக்கு ஆர்னோல்டு சுவார்செனேகர் தலைமை விருந்தினராக அழைத்து வரப்பட்டார். அதன் பிறகு சில காலத்தில் ஐ வெளியாகி, லாபகரமான படமாக மாறியது.[6] ஊடகங்களில்ரவிச்சந்திரன் தன்னை ஒளிப்படங்கள் எடுப்பதைத் தவிர்கிறார். தனது படங்களின் விளம்பர நிகழ்வுகளில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருக்க விரும்புகிறார். Behindwoods.com, உடனான ஒரு நேர்காணலில் தனது திருமணத்தில் ஒளிப்படக் கலைஞர்கள் யாரும் இருக்கவில்லை என்றும், குடும்ப ஒளிப்படங்களில், தன் மனைவி மட்டுமே தன குழந்தைகளுடன் தோன்றுவார் என்றும் தெரிவித்தார்.[5] திரைப்படவியல்தயாரிப்பு
விநியோகம்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia