2022 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல்
மாநிலங்களவை தலைமைச் செயலாளர் இத்தேர்தலை நடத்துவார். தற்போதுள்ள குடியரசுத் தலைவரின் பதவிக் காலம் 24 சூலை 2022 அன்றுடன் முடிவடைகிறது. 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவடைந்த பிறகு குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இத்தேர்தலில் 776 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 4,403 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்குகள் செலுத்த உள்ளனர். இத்தேர்தலில் யாருக்கு வாக்கு செலுத்த வேண்டும் என்பது குறிதது அரசியல் கட்சிகளின் கொறடாக்கள், தங்கள் கட்சியினருக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது. தேர்தல் அட்டவணை
தேர்தல் முறைகுடியரசுத் தலைவர் தேர்தலில் மக்களால் நேரடியாக வாக்களிக்க முடியாது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் (MLA), நாடாளுமன்ற உறுப்பினர் (MP) வாக்களிப்பர்.மொத்தம் வாக்களிப்போர் 776 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 4,033 சட்டமன்ற உறுப்பினர்கள் என 4,809 பேர் வாக்களிப்பர். நியமன சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது.1971 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி ஒரு சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்கு மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது.ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பு 708 ஆகும். ஆனால், ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம் இல்லாததால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பு குறைந்தது 700 என்று ஆகிவிட்டது.ஒரு சட்டமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பு அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலும் வாக்கு மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது.இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த வாக்கு மதிப்பு 5,43,200 ஆகும்.மாநில சட்டமன்றத் உறுப்பினர்களின் மொத்த வாக்கு மதிப்பு 5,43,231 ஆகும்.மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்கு மதிப்பு 10,86,431 ஆக உள்ளது.தேர்தல் அன்று வாக்களிக்க இந்திய வாக்காளர் குழு அதாவது சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களிக்க வாக்கு சீட்டு கொடுப்பர்.அப்பொழுது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க பச்சை நிற வாக்கு சீட்டும், சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க இளஞ்சிவப்பு நிற வாக்கு சீட்டுட்டில் வாக்களிப்பர்.
வேட்பாளர்கள்2022 இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் திரௌபதி முர்மு 24 சூன் 2022 அன்று தமது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் அவரின் வேட்புமனு ஏற்கப்பட்டது.[4]ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் திரிணாமுல் காங்கிரசு கட்சியை சேர்ந்த யஷ்வந்த் சின்கா 27 சூன் 2022 அன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார் அவரின் வேட்புமனு ஏற்கப்பட்டது.[5]
கூட்டணி வாரியாக வாக்கு சதவீதம்பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 5 லட்சத்து 26 ஆயிரத்து 420 வாக்குகள் உள்ளன. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 2 லட்சத்து 59 ஆயிரத்து 892 வாக்குகள் உள்ளன. எந்த அணியையும் சேராத மாநில கட்சிகளுக்கு 2 லட்சத்து 92 ஆயிரத்து 894 வாக்குகள் உள்ளன. பாஜக கூட்டணி நிறுத்தும் வேட்பாளர் வெற்றிபெறுவதற்கு சுமார் 13 ஆயிரம் வாக்குகள் குறைவாக உள்ளது. மாநில கட்சிகளின் ஆதரவை பெற்று பாரதிய ஜனதா கட்சி நிறுத்தும் வேட்பாளர் எளிதாக வெற்றிபெறுவார் கணிக்கப்படுகிறது.[6]
வாக்குகளின் மதிப்பு
தேர்தல் முடிவுகள்
இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia