2023 பாக்கித்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு
2023 பாக்கித்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு (2023 Census of Pakistan), இது பாக்கித்தான் நாட்டின் 7வது கணக்கெடுப்பு ஆகும்.[1][2][3]இக்கணக்கெடுப்பு பாகிஸ்தானி புள்ளியியல் அமைப்பால் 1 மார்ச் 2023 முதல் 31 மே 2023 வரை மேற்கொள்ளப்பட்டது.[4]இக்கணக்கெடுப்பு பாகிஸ்தானில் முதன்முறையாக மின்னணுக் கருவிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டது.[5][6][7][8] இக்கணக்கெடுப்பின் மூலம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர் பகுதிகளான கில்ஜிட்-பல்டிஸ்தான் மற்றும் ஆசாத் காஷ்மீர் தவிர்த்து பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகை 24,14,92,917 ஆக கணக்கிடப்பட்டுள்ளது.[9][10] 2017 மற்றும் 2023ம் ஆண்டுகளுக்கு இடையில் ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 2.55% உயர்ந்துள்ளது.[11]1998 மற்றும் 2017 கணக்கெடுப்புகளில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 2.38% ஆக இருந்தது. 6 மே 2023 அன்று பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகை 24,18,31,019 ஆக உள்ளது. இது 2017ம் ஆண்டின் கணக்கெடுப்பை விட 28.6 மில்லியன் கூடுதல் ஆகும்.[12] பாகிஸ்தான் மக்கள்தொகையில் கிராமப்புற மக்கள் தொகை 61.18% மற்றும் நகர்புற மக்கள் தொகை 38.82% ஆக உள்ளது.[13] இஸ்லாமாபாத் உள்ளிட்ட, ஆனால் கில்ஜித் பல்டிஸ்தான் & ஆசாத் காஷ்மீர் பகுதிகள் சேர்க்கப்படாத பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகை 23,86,59,411 ஆகும். இதுவே 2017ம் ஆண்டின் கணக்கெடுப்பில் 213.2 மில்லியன் ஆக இருந்தது.[14] 23 மே 2023 அன்று பாகிஸ்தான் புள்ளியல் அமைப்பு வெளியிட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இசுலாமாபாத் தலைநகர ஆள்புலம் சேர்த்து (கில்ஜித் பல்டிஸ்தான் & ஆசாத் காஷ்மீர் தவிர்த்து) பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகை 24,95,66,743 ஆக உள்ளது. மாகாணங்கள் வாரியாக மக்கள் தொகை
சமயங்கள் வாரியாக மக்கள் தொகை
மொழிகள் வாரியாக மக்கள் தொகை
கணக்கெடுப்பு முடிவுகள்5 ஆகஸ்டு 2023 அன்று பாகிஸ்தான் புள்ளியியல் அமைப்பின் கணக்கெடுப்பு முடிவுகளுக்கு பாகிஸ்தான் அரசு அங்கீகாரம் வழங்கியது.[9] கணக்கெடுப்பில் பாகிஸ்தான் மக்கள் தொகை 241.49 மில்லியன் ஆக உயர்ந்து, மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 2.55% ஆக உயர்ந்து காணப்பட்டது. பாகிஸ்தானின் ஊரகப் பகுதி மக்கள் தொகை 61.18% ஆகவும்; நகர்புற மக்கள் தொகை 38.82% ஆகவும் உள்ளது.[9] இதனையும் காண்க2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia