அரண்மனை 3
அரண்மனை 3 ( Aranmanai 3) என்பது சுந்தர் சி. இயக்கத்தில் 2021இல் வெளியான இந்திய தமிழ் மொழி நகைச்சுவை திகில் திரைப்படமாகும்.[1] இந்த படத்தில் சுந்தர் சி., ஆர்யா, ராசி கன்னா, ஆண்ட்ரியா ஜெரெமையா, சாக்ஷி அகர்வால், விவேக் (அவரது மரணத்திற்குப் பின் வெளியாகும் படம்), மைனா நந்தினி, யோகி பாபு, நளினி, மனோபாலா, சம்பத் ராஜ், ஓவி பண்டர்கர், வின்சென்ட் அசோகன் மற்றும் பலரும் நடிக்கின்றனர். படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளது. இது அரண்மனை திரைப்படத் தொடரின் மூன்றாவது பாகமாகும். அவினி சினிமேக்ஸ் பதாகையின் கீழ் குஷ்பூ இப்படத்தை தயாரித்துள்ளார். யூ. கே. செந்தில் குமார் ஒளிப்பதிவையும், சி. சத்யா இசையமைப்பையும், பென்னி ஆலிவர் படத் தொகுப்பையும் மேற்கொண்டனர். படம் 14 அக்டோபர் 2021 அன்று திரையரங்கில் வெளியிடப்பட்டது.[2] இந்த படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் திரையரங்க வசூலில் வெற்றி பெற்றது.[3][4] நடிப்பு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia