கேங்கர்ஸ்
கேங்கர்ஸ் என்பது ஒர் நகைச்சுவை இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். சுந்தர் சி நடித்து இயக்கி வடிவேலு, கா்ரீன் திரீசா, வாணி போஜன் ஆகியோர் நடித்துள்ளனர். 24 ஏப்ரல் 2025ஆம் வெளிவந்தது.[1] இந்தியத் திரைப்படத் தணிக்கை குழுவிடம் இருந்து யு/ஏ சான்றிதழ் கிடைத்தது.[2] நடிகர்கள்
துணுக்குமுதலில் படத்திற்கு தலைப்பாக கேங்கஸ்டர் (gangster) என்று யோசித்த சுந்தர் சி, இப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் கேங்கஸ்டர் அளவுக்கு சமூக விரோதிகள் அல்ல என்பதால் தயங்கினார். வடிவேலு கேங்கர்ஸ் என்ற தலைப்பைக் கூற, அதனையே படத்திற்கு தலைப்பாக வைத்துவிட்டார் சுந்தர் சி.[3] வரவேற்புஇத்திரைப்படத்திற்கு விமர்சனம் எழுதிய தினத்தந்தி நாளிதழ், "காதல், சென்டிமென்ட், நகைச்சுவை, அதிரடி, கிளாமர் என தனக்கே உரிய பாணியில் ரசிக்கும்படியான திரைக்கதையில் படத்தை நகர்த்தி மீண்டும் முத்திரை பதித்துள்ளார்" என்று எழுதியது.[4] தினமலர் நாளிதழ் (3.25/5) மதிப்பெண்கள் வழங்கி, "வடிவேலு போன்ற காமெடி ஜாம்பவானை சரியாக பயன்படுத்தி ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார்" என்று எழுதினர்.[5] விமர்சனம் எழுதிய விகடன் குழுமம், "காமெடி வசனங்கள் என்கிற பெயரில் உருவக்கேலி, பாலினக் கேலி, பெண்களைக் கொச்சைப்படுத்துதல் போன்றவற்றை பத்ரி - வெங்கட் ராகவனின் வசனக் கூட்டணி தவிர்த்திருக்கலாம்" என்று எழுதினர்.[6] மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia