ஆக்ஷன்
ஆக்ஷன் (Action) என்பது 2019 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் அதிரடி திரைப்படம் ஆகும்.[1] சுந்தர் சி. இயக்கிய இப்படத்தை ஆர். ரவீந்திரன் தனது டிரைடென்ட் ஆர்ட்ஸ் பதாகையின் கீழ் தயாரித்ததுள்ளார். இந்த படத்தில் விஷால், தமன்னா ஆகியோர் உளவுத்துறை அதிகாரிகளாக இணைந்து பயங்கரவாதியை வேட்டையாடும் ஒரு உலகளாவிய பணியைத் தொடங்குகின்றனர். இந்த படத்தில் அகன்க்ஷா பூரி, ஐஸ்வர்யா இலட்சுமி (அவரது தமிழ் திரைப்பட அறிமுகம்), ராம்கி, சாயா சிங், யோகி பாபு, கபீர் துஹான் சிங் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர் . இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். இப்படத்தில் சுந்தர் சி. ஒரு சிறிய காட்சியில் தோன்றுகிறார்.[2][3] ஆக்ஷன் படமானது 2019 நவம்பர் 15 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. சில அதிரடி காட்சிகள் மற்றும் மரணதண்டனை குறித்த விமர்சனங்களுக்காக பாராட்டுக்களைப் பெற்றது,[4] இது வணிக ரீதியான தோல்வி படமாகும். அதே நேரத்தில் இதன் இந்தி மொழிமாற்று பதிப்பு யூடியூபில் வெற்றி பெற்றது.[5] கதைச் சுருக்கம்ஒரு பயங்கரவாதியைக் கண்காணிக்க இந்திய இராணுவத்தால் அனுப்பப்பட்ட ஒரு அதிகாரி, தனது சொந்த நாட்டில் இரகசிய உளவாளிகளை கண்டறியும்போது அவரது பணி சிக்கலக மாறுகிறது. நடிப்பு
இசைஇப்படத்திற்கான இசையை ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை பா. விஜய், ஹிப்ஹாப் தமிழா, அறிவு, பால் பி சைலஸ், நவ்ஸ் ஆகியோர் எழுதியுள்ளனர். இந்த படத்தின் இசைத் தொகுப்பானது ஐந்து பாடல்களைக் கொண்டுள்ளது. மேலும் அவை அனைத்தும் தனிப்பாடல்களாகவும் வெளியிடப்பட்டன. 2019 அக்டோபர் 30 அன்று பாடல் தொகுப்பு வெளியிடப்பட்டது. இதன் தெலுங்கு பதிப்பு 2019 நவம்பர் முதல் நாளன்று வெளியிடப்பட்டது. பாடலின் அசல் பதிப்பை ஹிப்ஹாப் ஆதி மற்றும் பால் பி சைலஸ் ஆகியோர் பாடினர்.[6]
வெளியீடுபடத்தின் அதிகாரப்பூர்வ தூண்டோட்டம் 2019 செப்டம்பர் 13 அன்று வெளியிடப்பட்டது,[7] தொடர்ந்து முன்னோட்டமானது 2019 அக்டோபர் 27 அன்று வெளியிடப்பட்டது.[8] இந்த படம் இந்தியாவில் 2019 நவம்பர் 15 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. வீட்டு ஊடகம்படத்தின் செயற்கைக் கோள் உரிமைகள் விஜய் தொலைக்காட்சிக்கு விற்கப்பட்டது. அமேசான் பிரைம் வீடியோவில் 2019 திசம்பர் 16 முதல் ஆக்சன் வெளியானது. படம் 2020 நவம்பர் 4 அன்று ஜப்பானில் குறுவட்டில் வெளியிடப்பட்டது.[9] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia