ஒருநாள் போட்டி நடைபெறும் அரங்குகள்
2014 இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் இலங்கை சுற்றுப்பயணம் 2014 நவம்பர் 21 தொடக்கம் டிசம்பர் 16 வரை இடம்பெற்றது. இச்சுற்றுப் பயணத்தின் போது ஏழு ஒருநாள் போட்டிகளில் அது இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாடியது. இதுவே இலங்கை அணி தனது நாட்டில் விளையாடிய முதலாவது ஏழு-ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் போட்டித் தொடராகும். இலங்கை அணி இத்தொடரை 5-2 என்ற கணக்கில் வென்றது. இலங்கை ஆட்டக்காரர் மகேல ஜயவர்தன இலங்கையில் விளையாடிய கடைசி பன்னாட்டு ஆட்டமும், குமார் சங்கக்கார இலங்கையில் விளையாடிய கடைசி ஒருநாள் போட்டியும் இதுவாகும். இவர்கள் இருவரும் 2015 உலகக்கிண்ணப் போட்டிகளை அடுத்து இளைப்பாறுகின்றனர். இங்கிலாந்து துடுப்பாட்ட அணி இரண்டு ஒருநாள் துடுப்பாட்டப் பயிற்சிப் போட்டியிலும் பங்குபற்றியது.
அணிகள்
பயிற்சிப் போட்டி
1வது பயிற்சி ஒருநாள் பன்னாட்டுப் போட்டி
' இலங்கைத் துடுப்பாட்ட அணி A'  198/6 (43 ஓவர்கள்)
|
எ
|
|
|
|
|
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை A அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது
- போட்டி தொடங்குவதற்கு முன் மழை பெய்ததனால் டக்வோர்த் லூயிஸ் முறை மூலம் அணிக்கு 43 ஓவர்கள் வீதம் குறைந்தது வழங்கப்பட்டது'
- இரண்டாம் முறை ஆட்டத்தின்போது போதிய வெளிச்சமின்மை காரணத்தால் டக்வோர்த் லூயிஸ் முறை மூலம் அறுதியிடப்பட்டது
2வது பயிற்சி ஒருநாள் பன்னாட்டுப் போட்டி
இலங்கைத் துடுப்பாட்ட அணி A 
|
எ
|
|
|
|
|
ஒருநாள் பன்னாட்டுப் போட்டித் தொடர்
1வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி
- நாணயச் சுழற்சியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று களத்தடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
- மழையினால் தாமதமாக துவங்கயப்பட்டது
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அதன்படி, இலங்கை அணியின் திலகரத்ன டில்சான், குசல் பெரேரா தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரின் ஆட்டத்தால் இலங்கை 18.5 ஓவர்களில் 100 ஓட்டங்களை கடந்தது. 22.2 ஓவர்களில் 120 ஓட்டங்கள் எடுத்திருக்கும்போது குசல் பெரேரா 59 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து குமார் சங்கக்கார களம் இறங்கினார். இவர் 2 ஓட்டக்களில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு திலகரத்ன டில்சானுடன் மகேல ஜயவர்தன இணைந்தார். இவர்கள் 3-வது விக்கெட்டுக்கு 76 ஓட்டங்கள் குவித்தனர். 88 ஓட்டங்கள் எடுத்த நிலையில் டில்சான் ஆட்டமிழந்தார். மகேல தன் பங்குக்கு 58 பந்துகளில் 55 ஓட்டங்கள் எடுத்தார். இலங்கை அணித் தலைவர் அஞ்செலோ மாத்தியூஸ் 24 பந்துகளில் 33 ஓட்டமும், ஜீவன் மென்டிஸ் 14 பந்துகளில் 30 ஓட்டங்களும் குவிக்க இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 317 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் 318 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 47.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 292 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை அணி 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து துடுப்பாட்ட அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது
- மழையினால் அணி ஒன்றுக்கு 45 ஓவர்கள் வீதம் ஆட்டம் சுருக்கப்பட்டது.
3வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி
- இலங்கை நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- இரணு ஓவர்களில் வெளிச்சம் போதாமையால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டு, ஒவ்வோர் அணியும் 35-ஓவர்கள் விளையாடின. இங்கிலாந்தின் இலக்கு டக்வோர்த் லூயிஸ் முறையில் 236 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
- ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளில் 13,000 ஓட்டங்கள் எடுத்தவர்களில் குமார் சங்கக்கார (இல) நான்காவதாக உள்ளார்.[2]
- 'இங்கிலாந்து அணியின் மெதுவான ஆட்டம் காரணமாக அவ்வணியின் தலைவர் அலஸ்டைர் குக் ஒரு ஆட்டத்தில் விளையாடத் தடை விதிக்கப்பட்டது.[3]
4வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி
- நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- அலஸ்டைர் குக் இவ்வாட்டத்தில் விளையாடத் தடை செய்யப்பட்டதால், இயோன் மோர்கன் இங்கிலாந்து அணித் தலைவராக விளையாடினார்.[4]
5வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி
- நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- இலங்கை அணியின் ஆட்ட முடிவில் மழை காரணமாக ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது. மேலும் அதே நாளில் விளையாட முடியாத நிலையில், இங்கிலாந்து அணியின் ஆட்டம் அடுத்த நாள் இடம்பெற்றது.
- சட்டத்துக்குப் புறம்பான பந்து வீச்சுக் குற்றச்சாட்டின் பேரில் பன்னாட்டு ஆட்டங்களில் தடை விதிக்கப்பட்டிருந்த சச்சித்திர சேனநாயக்கா தடை நீக்கப்பட்டதன் பின்னர் தனது முதலாவது ஆட்டத்தை விளையாடினார்.[5]
6வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி
- நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
7வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி
|
எ
|
|
|
|
ஜோ ரூட் 80 (99) சீக்குகே பிரசன்னா 3/35 (8 ஓவர்கள்)
|
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- மகேல ஜயவர்தன இலங்கையில் விளையாடிய கடைசி பன்னாட்டு ஆட்டம். குமார் சங்கக்கார இலங்கையில் விளையாடிய கடைசி ஒருநாள் பன்னாட்டுப் போட்டி. திலகரத்ன டில்சான் ஒருநாள் போட்டிகளில் 9000 ஓட்டங்களைக் கடந்தார்.
மேற்கோள்கள்