இந்தியத் துடுப்பாட்ட அணி ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடுவதற்காக 2021 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இங்கிலாந்திற்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது.[1][2]
இங்கிலாந்து நாணயச் சுழற்சியில் வென்று மட்டையாடத் தேர்ந்தெடுத்தது..
மழை காரணமாக இரண்டாம் நாள் மற்றும் மூன்றாம் நாள் ஆட்டத்தில் 56.2, 46.5 நிறைவுகள் மழை காரணமாக விளையாடப்படவில்லை.
மழை காரணமாக ஐந்தாம் நாள் விளையாடப்படவில்லை.
ஜோ ரூட் (இங்) அலஸ்டைர் குக்கைப் பின்னுக்குதள்ளி பன்னாட்டு துடுப்பாட்டத்தில், இங்கிலாந்திற்காக அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார் .[5]
ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்) தேர்வுப் போட்டிகளில், தன்னுடைய 620-வது இலக்கைக் கைப்பற்றி , தேர்வுப் போட்டிகளில் அதிக இலக்குகளைக் கைப்பற்றிய வீரர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறினார்.[6]
ஓலி ராபின்சன் (இங்) தேர்வுப் போட்டிகளில் தனது முதலாவது ஐவீழ்த்தல் கைப்பற்றினார்..[7]
ரவீந்திர ஜடேஜா தேர்வுப் போட்டிகளில் 2,000 ஓட்டங்கள் மற்றும் 200 இலக்குகளை வீழ்த்திய இந்தியாவின் ஐந்தாவது துடுப்பாட்ட வீரர் ஆவார்.[8]
ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை புள்ளிகள்: இங்கிலாந்து 2, இந்தியா 2.[9]