2009 ஆம் ஆண்டில் இலங்கை அணி லாகூரில் துடுப்பாட்டப் போட்டித் தொடரில் விளையாடச் சென்ற போது இலங்கை அணி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், இலங்கை அணியின் ஆறு வீரர்கள் காயமடைந்தனர்.[4] அதன் பின்னர் சிம்பாப்வே அணி மட்டும் 2015 மே மாதத்தில் பாக்கித்தான் சென்று தேர்வுப் போட்டியில் விளையாடியது. வேறு எந்த தேர்வு அணிகளும் பாக்கித்தான் செல்லவில்லை.[4]
அமீரகத்தில் நடந்த இரண்டாவது தேர்வுப் போட்டி பகல்/இரவு போட்டியாக விளையாடப்பட்டது. இவ்வாறான போட்டி ஒன்றில் விளையாடுவது இலங்கைக்கு முதற் தடவையாகும்.[5] இலங்கை அணி தேர்வுத்தொடரை 2–0 என்ற கணக்கில் வென்றது. அமீரகத்தில் விளையாடிய தொடர்களில் பாக்கித்தான் அனைத்துத் தேர்வுப் போட்டிகளிலும் தோல்வியடைந்தது இதுவே முதன் முறையாகும்.[6] ஒருநாள் தொடரை பாக்கித்தான் அணி 5–0 என்ற கணக்கில் வென்றது.[7] ஒரே ஆண்டில் மூன்று தடவைகள் அனைத்து ஒரு-நாள் போட்டிகளிலும் தோல்வியடைந்த ஒரே நாடு என்ற சாதனையைப் பெற்றது. முன்னதாக இதே ஆண்டில் தென்னாப்பிரிக்காவுடனும், இந்திய அணியுடனும் விளையாடி அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியடைந்திருந்தது.[8]
பாக்கித்தான் 83 ஓட்டங்களால் வெற்றி துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய் நடுவர்கள்: அசான் ராசா (பாக்), ச்ந்தரம் ரவி (இந்) ஆட்ட நாயகன்: சோயிப் மாலிக் (பாக்)
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
உபுல் தரங்க 112* (144) சதாப் கான் 3/47 (9 ஓவர்கள்)
பாக்கித்தான் 32 ஓட்டங்களால் வெற்றி சேக் சாயிது துடுப்பாட்ட அரங்கம், அபுதாபி நடுவர்கள்: ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்), சொசாப் ராசா (பாக்) ஆட்ட நாயகன்: சதாப் கான் (பாக்)
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
பாபர் அசாம் (பாக்) ஒரே நாட்டில் அடுத்தடுத்த ஐந்து (ஒருநாள்) சதங்களைப் பெற்ற முதலாவது வீரர் என்ற சாதனையைப் பெற்றார்.[18]
பாக்கித்தான் 7 இலக்குகளால் வெற்றி சேக் சாயிது துடுப்பாட்ட அரங்கம், அபுதாபி நடுவர்கள்: சுந்தரம் ரவி (இந்), ஆசான் ராசா (பாக்) ஆட்ட நாயகன்: இமாம்-உல்-அக் (பாக்)
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
இமாம்-உல்-அக் (பாக்) தனது முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடி, முதல் போட்டியிலேயே சதம் பெற்ற 13வது ஆட்டக்காரரானார்.[19]
பாக்கித்தான் 7 இலக்குகளால் வெற்றி சார்ஜா துடுப்பாட்ட அரங்கம், சார்ஜா நடுவர்கள்: ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்), சோசாப் ராசா (பாக்) ஆட்ட நாயகன்: பாபர் அசாம் (பாக்)
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
உசுமான் கான் (பாக்), சதீர சமரவிக்கிரம (இல) தமது 1வது ஒருநாள் போட்டியில் விளையாடினர்.