குழந்தைபிறப்பு வன்கொடுமை
குழந்தைபிறப்பு வன்கொடுமை (Abuse during childbirth) அல்லது மகப்பேறியல் வன்முறை என்பது பிரசவத்தின்போது புறக்கணிப்பு, உடல் ரீதியான வன்கொடுமை மற்றும் மரியாதை இல்லாமை போன்றவைகளாகும். இவ் வன்கொடுமைகள் பெண்களின் உரிமைகளை மீறுவதாக கருதப்படுகிறது. குழந்தை பிறப்புக்கு முன் கவனிப்பு இல்லாமையும் பிற சுகாதார சேவைகளைப் பயன்படுத்துவதில் பெண்களைத் தடுக்கும் நிலையையில் இருந்தது.[1] பிரசவத்தின்போது வன்முறை செய்வது என்பது பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் முக்கியமானதகும்.. குழந்தைபிறப்பு வன்கொடுமை நடைமுறைகள் பரவலாக இருப்பது குறித்து உலக சுகாதார அமைப்பால் ஆய்வுகள் நடத்தப்பட்டது. இது ஒரு உலகளாவிய பிரச்சினை என்பது நிறுவனத்தின் ஆய்வுகள் நிரூபிக்கின்றன. மருத்துவ மற்றும் சுகாதார வசதிகளில் பிறப்பு ஏற்படும் போது பெண்கள் அவமரியாதை, தவறான அல்லது புறக்கணிக்கப்பட்ட சிகிச்சையைப் பெறுகிறார்கள். பெண்கள் மற்றும் சுகாதார வழங்குநர்களிடையே தவறான உறவு மற்றும் நம்பிக்கை பிறக்கும் போது மருத்துவ உதவியைப் பெற தயக்கம் காட்டுகிறார்கள். இதனால் கர்ப்ப காலத்தில் அவமரியாதை மற்றும் தவறான சிகிச்சையை பெற வேண்டிவருகிறது. பிரசவத்தின்போது ஒரு பெண் மிகவும் பாதிப்பு அடைகிறாள். மேலும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இயலாது. இவ் வன்முறைகளால் குழந்தை மற்றும் தாய்க்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது.[2] பிரசவத்தின்போது ஒரு பெண் வன்கொடுமை அனுபவித்திருக்கிறாரா என்பதை தீர்மானிக்க ஆய்வுகளில் பல்வேறு காரணங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில உடல் ரீதியான கொடுமை, சம்மதமில்லாத பராமரிப்பு, இரகசியமற்ற பராமரிப்பு, கண்ணியமற்ற பராமரிப்பு, பாகுபாடு, கவனிப்பைக் கைவிடுதல் மற்றும் வசதிகளைத் தடுத்து வைத்தல் போன்றவை முக்கியமான காரணங்கள் ஆகும். இவற்றில் உடல் ரீதியான வன்முறையின் கீழ் அடித்தல், கிள்ளுதல், கட்டுப்படுத்துதல், வலி நிவாரண மருந்துகள் வழங்கப்படாதது மற்றும் கற்பழிப்பு / பாலியல் வன்கொடுமை போன்ற காரணங்களாகும். மேலும் சம்மதமில்லாத பராமரிப்பு என்பது சிசேரியன், கருத்தடை செய்தல் போன்றவற்றைச் செய்வதற்கு முன் நடைமுறைகளைப் பற்றி தெரிவிக்கவில்லை போன்றவற்றைக் குறிக்கிறது. இரகசியமற்ற பராமரிப்பு என்பது பெண்களின் தனிப்பட்ட மருத்துவ தகவல்களை அவர்கள் அனுமதியின்றி வெளிப்படுத்துவது ஆகும். இவ் வன்முறையில் கண்ணியமற்ற பராமரிப்பு என்பது பெண்களைத் திட்டுதல், அச்சுறுத்துதல், எதிர்மறை அல்லது ஊக்கமளிப்பதைக் குறிக்கிறது. இந்த சூழலில் பாகுபாடு என்பது வயது, மருத்துவ பின்னணி அல்லது கலாச்சார / மொழி பின்னணி காரணமாக கவனிப்பை மறுப்பதாகும். மேலும் மருத்துவர் இல்லாமல், நோயாளியைப் புறக்கணிப்பதும் அல்லது உறவினரிடம் தோழமையை மறுக்கும்போது கவனிப்பைக் கைவிடுவது போன்றவையாகும்.மேலும் வசதிகளுடன் தடுப்புக்காவல் என்பது நிலுவைத் தொகை, செலுத்தப்படாத லஞ்சம் போன்ற காரணங்களால் ஒரு நோயாளியை வெளியேற அனுமதிக்காது போன்றவையாகும்.[3] இதனால் பெண்கள் பிரசவத்தின் போது வன்கொடுமை அனுபவிக்கும் வாய்ப்புகள் அதிகம். மேலும் இளம் பருவத்தினர், புலம்பெயர்ந்த பெண்கள், எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுபான்மை இனப்பெண்கள் மற்ற பெண்களை விட வன்கொடுமைக்கு அதிகம் ஆளாகிறார்கள்.[2][4][5][6][7][8] மகப்பேறியல் வன்முறை" என்ற சொல் குறிப்பாக லத்தீன் அமெரிக்க நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது, அங்கு மகப்பேறியல் வன்முறை நடத்தைகளை சட்டம் தடை செய்துள்ளது. இத்தகைய சட்டங்கள் அர்சென்டினா, புவெர்டோ ரிக்கோ மற்றும் வெனிசுலா போன்ற நாடுகளில் தடைச்செய்யப் பட்டுள்ளது.[9] " "மகப்பேறியல் வன்முறை" என்பது பிரசவத்தின்போது வன்முறை என்பதற்கு பயன்படுத்தப்படும் சொல்லாகும். நாடுகள்1950 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கணவரின் தையல் என்று அழைக்கப்பட்ட தையல் முறையைப் பயிற்சி செய்தனர். கணவரின் தையல் பற்றிய ஆதாரங்கள் வட அமெரிக்க மகப்பேறியல் நிபுணர்கள் மற்றும் மகளிர் மருத்துவ வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். கணவரின் தையல் என்பது எபிசியோடமி அல்லது இயற்கையான கிழிப்புக்குப் பிறகு பெண்ணின் யோனியில் கூடுதல் தையல்களை இடுவதாகும். இதனால் கணவரின் எதிர்கால பாலியல் இன்பத்தை அதிகரிக்கும் என்றும்,பெரும்பாலும் நீண்ட கால வலி மற்றும் பெண்ணுக்கு கோளாறுகளைத் தரக்கூடியதாக அமையும். ஆனால் இத்தகைய நடைமுறை வட அமெரிக்காவில் பரவலாக இருந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் அளிக்கப்படவில்லை.[10][11] ஆனால் எபிசியோடொமி பற்றிய ஆய்வுகளில், பிரேசில் போன்ற பிற அமெரிக்க நாடுகளிலும் இது அடிக்கடி குறிப்பிடப்படுகிறது.[12] கர்ப்பிணிப் பெண்களுக்கு வட அமெரிக்க மருத்துவர்களின் சிகிச்சை முறைகள் குறித்து அண்மைய சிறப்பம்சங்கள் குறிப்பிடுகின்றன. மகப்பேறியல் வன்முறைக்கு ஒரு "நிவாரணம்" பெண்கள் தேர்ந்தெடுக்கும் உரிமைகள் சில சூழ்நிலைகளில் சமரசம் செய்யப்படுகிறது. ஒரு பெண்ணின் கருவின் உயிருக்கு ஆபத்து இருந்தால், கவனிப்பை மறுக்க பெண்ணுக்கு உரிமை உண்டு. மேலும் அறுவைசிகிச்சை பிரிவு, எபிசியோடமி மற்றும் வெற்றிட உதவியுடன் வழங்கல் எனப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. பலாத்காரப்படுத்தி பெண்களை நடைமுறைக்குள் வைத்திருப்பதற்கு கட்டாயப்படுத்தப்படுவது நீண்டகால சேதத்தை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை பல பெண்கள் கற்பழிப்புடன் ஒப்பிடுகிறார்கள்[13] மெக்சிகோ நாட்டில் மகப்பேறியல் வன்முறை குறித்து சில ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டது. 2012 ஆம் ஆண்டில், ரொசாரியோ சாண்டியாகோவும் மற்றவர்களும் மெக்சிகோவில் உள்ள இரண்டு பொதுமருத்துவ மனைகளில் ஒரு மாதத்திற்கான பிறப்பு அனுபவங்களை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் படி உடல், வாய்மொழி வன்முறை மற்றும் பாகுபாடு வெளிப்படையாக நடந்து கொண்டிருந்தது தெரியவந்தது. அரசாங்க உதவி காப்பீட்டைக் கொண்ட பெண்கள், சுகாதார நிபுணர்களிடமிருந்து பாகுபாட்டிற்கு உட்படுத்தப் படுகிறார்கள்.[14] தான்சானியா நாடு பிரசவத்தின்போது பெண்கள் மீதான வன்முறைக் குறித்து அக்கறை கொண்டதாகும். 2011 ஆம் ஆண்டில், சானன் மக்மேகன் மற்றும் பிறர் பிரசவத்தின்போது வன்முறையை குறைப்பதற்கான தலையீடுகள் நடைமுறையில் உள்ளதா இல்லையா என்பதை ஆராய்ந்தனர். பெண்களை நேர்காணல் செய்யும் போது, அவர்கள் தங்கள் அனுபவங்களை நடுநிலை அல்லது சிறந்தது என்று குறிப்பிட்டனர். பிறகு வன்முறையின் வெவ்வேறு அம்சங்களைக் காட்டிய பின்னர், பெரும்பான்மையான பெண்கள் பிரசவத்தின்போது வன்முறையை அனுபவித்திருக்கிறார்கள்.[15] 2014 ஆம் ஆண்டில், அன்னா ராட்க்ளிஃப் மற்றும் பிறர் பிரசவத்தின்போது அவமதிப்பு மற்றும் வன்முறை அனுபவங்களை மேம்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்தனர். இந்த ஆய்வு 2013 ஆம் ஆண்டு மற்றும் 2014 ஆம் ஆண்டிற்கு இடையில் நடத்தப்பட்டது. நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிப்பவருக்கும் இடையிலான தகவல் தொடர்புகளை எளிதாக்கும் வகையில் பிறப்பைச் பற்றிய நடைமுறைகளைக் குறித்து அறிவுறுத்துவதற்கும் ஒரு "திறந்த பிறந்த நாள்" என்பதைச் செயல்படுத்தினர். திறந்த பிறந்த நாளைத் தவிர ஒரு "மரியாதைக்குரிய மகப்பேறு பராமரிப்பு பட்டறை" யையும்நடத்தினர். இச் செயல்பாடுகள் ஊழியர்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையில் மரியாதையான சூழலை உருவாக்க உதவியது. இந்த அணுகுமுறை அதிக செலவில்லாமல் அமைப்புகளைப் புனரமைக்க உதவுவதில் வெற்றிகண்டது. இவ் அணுகுமுறையால் பெண்களின் பிரசவ அனுபவத்தில் 60% திருப்தி அளித்தல் அதிகரித்தது.[16] ஆய்வில் அன்னா ராட்க்ளிஃப் , சீபெப்னி குசுவாக்கியும் மற்றவர்களும் பிரசவ வன்முறையைக் குறைப்பதற்கான அணுகுமுறைக்கு முன்பும் அதற்குப் பின்பும் ஒப்பிட்டு ஆய்வு செய்தனர். மேலும் 2011-2012 ஆம் ஆண்டில் அடிப்படை ஆய்வு நடத்தப்பட்டது. இதன் இறுதி ஆய்வுப்பகுதி 2015 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் பிரசவத்தின்போது வன்முறை மற்றும் அவமதிப்பை அனுபவிப்பது 66% குறைந்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. மேலும் சமூகம் மற்றும் சுகாதார அமைப்பு சீர்திருத்தங்களால் பிரசவத்தின்போது பெண்களைத் தவறாக நடத்தும் நிலைமையை மாற்றியமைக்கலாம் என்பதைக் காட்டுகிறது.[17] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia