சிர்காசியா மீதான மங்கோலியப் படையெடுப்புசிர்காசியா மீதான மங்கோலியப் படையெடுப்பு என்பது மங்கோலியப் பேரரசு சிர்காசியா மீது நடத்திய படையெடுப்பைக் குறிப்பதாகும். சிர்காசிய நிலப்பரப்பு மீது 13 மற்றும் 14ஆம் நூற்றாண்டுகளில் மங்கோலியர்கள் பெருமளவிலான படையெடுப்புகளை நடத்தினர்.[1] 1253ஆம் ஆண்டு[2] காக்கேசியாவிற்குப் பயணம் மேற்கொண்ட உருப்ருக்கின் வில்லியம் சிர்காசியர்கள் என்றுமே மங்கோலிய ஆட்சிக்கு அடிபணியவில்லை என்று எழுதியுள்ளார். சிர்காசிய எதிர்ப்பை நொறுக்கும் பணிக்காக மொத்த மங்கோலிய இராணுவத்தில் ஐந்தில் ஒரு பங்கினர் ஒதுக்கப்பட்டிருந்த போதும் சிர்காசியர்கள் இவ்வாறு இருந்தனர்.[3] காடுகள் மற்றும் மலைகள் ஆகிய இரண்டையும் பயன்படுத்திச் சிர்காசியர்கள் கரந்தடிப் போர்முறையை[4] வெற்றிகரமாக நடத்தினர். தங்களது சுதந்திரத்தையும் சிறிதளவுக்கு நிலைநாட்டினர்.[5][6] மங்கோலியப் படையெடுப்புகளின் நீண்டகால விளைவுகள்கலாச்சார விளைவுகள்அல்மஸ்டி என்று அழைக்கப்படும் புராண மிருகத்தைப் பற்றிய பதிவுகளானவை மங்கோலியக் காலங்களிலிருந்து குறிப்பிடப்படுகின்றன. அல்மஸ்டி என்பது ஒரு மங்கோலியச் சொல்லாகும். இச்சொல்லின் பொருள் காட்டு மனிதன் ஆகும். அல்மஸ்டி என்பது தீய காட்டு உயிரினமாகும். இது மந்திரத் தன்மையுடைய முடியைக் கொண்டிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. ஜய்மோவுக்கா என்பவரின் கூற்றுப்படி, மங்கோலியப் பெயரானது உள்ளூர்ப் பெயரின் பயன்பாட்டில் வந்திருக்கலாம். சிம்சிரில் தங்க நாடோடிக் கூட்டத்தினர் சிறிது காலம் தங்கியிருந்தபோது இப்பெயர் வந்திருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.[7][8] மேலும் காண்கஉசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia