சிவபெருமான் திருஇரட்டை மணிமாலைசிவபெருமான் திருவிரட்டைமணிமாலை என்னும் இந்த நூல் பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. 96 வகையான சிற்றிலக்கியங்களில் இரட்டைமணிமாலை என்பதும் ஒன்று. 10ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த கபிலதேவ நாயனார் என்னும் புலவர் இதன் ஆசிரியர். கடலில் பிறக்கும் முத்தும் பவளமும் இரண்டு மணிகள். இந்த இரண்டு மணிகளும் அடுத்தடுத்து மாறி மாறி வரும்படி மாலையாகக் கோக்கப்பட்டது இரட்டைமணிமாலை. இந்த மாலை போல இந்த நூலில் வெண்பா, கட்டளைக்கலித்துறை ஆகிய இரு பாடல்களைக் கோத்து அமைத்துப் பாடப்பட்டது இந்த நூல். சிவபெருமானைப் போற்றிப் பாடிய 37 பாடல்கள் இதில் உள்ள. பாடல்
என்பது இந்நூலின் முதல் வெண்பாப்பாடல்.
என்பது இந்நூலில் ஆறாம் பாடலாக அமைந்துள்ள கட்டளைக்கலித்துறைப் பாடல். இந்தப் பாடலில் மடக்கு என்னும் அணிநலம் காணப்படுகிறது. அந்த மடக்குகளில் பிரித்துப் பொருள் காணவேண்டிய பொதுமொழித் தொடர்கள் உள்ளன. [2] காலம் கணித்த கருவிநூல்
அடிக்குறிப்பு |
Portal di Ensiklopedia Dunia