தஞ்சாவூர் கலியுக வெங்கடேசப்பெருமாள் கோயில்
தஞ்சாவூர் கலியுக வெங்கடேசப்பெருமாள் கோயில், தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூரில் தெற்கு வீதியில் அமைந்துள்ளது. தேவஸ்தான கோயில்தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.[1][2] மூலவர்இக்கோயிலின் மூலவராக ஸ்ரீதேவி பூதேவியுடன் கலியுக வெங்கடேசப்பெருமாள் உள்ளார். அமைப்புராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது திருச்சுற்றில் கொடி மரமும் பலிபீடமும் உள்ளன. உயர்ந்த தளத்தில் நவக்கிரக சன்னதி உள்ளது. அடுத்து துளசி மாடம், அமிர்த வெங்கடேஸ்வரர் சன்னதி உள்ளது. தொடர்ந்து உள்ள மண்டபத்தில் தசாவதார ஓவியங்கள் காணப்படுகின்றன. அடுத்து ராமர், தைத்யமர்த்தினி, அனுமார், கஜசம்காரமூர்த்தி ஆகியோர் உள்ளனர். கருவறையின் முன் உள்ள முன் மண்டபத்தில் மூலவருக்கு எதிரே கருடாழ்வார் உள்ளார். கருவறையின் வாயிலின் இரு புறமும் கிஷ்கிந்தனும், தீர்த்தனும் உள்ளனர். வலப்புறம் மகாலட்சுமி, சதுர்புஜ வெங்கடேசப்பெருமாள், விக்னேசன் ஆகியோர் உள்ளனர். நவநீத சேவைநவநீத சேவையின்போது தஞ்சாவூரிலுள்ள நீலமேகப்பெருமாள், நரசிம்மப்பெருமாள், மணிக்குன்னப்பெருமாள், கல்யாண வெங்கடேசப்பெருமாள், மேலராஜவீதி நவநீதகிருஷ்ணன், எல்லையம்மன் தெரு ஜனார்த்தன பெருமாள், கரந்தை யாதவ கண்ணன் கோயில், கீழராஜவீதி வரதராஜபெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேச பெருமாள், பள்ளியக்ரகாரம் கோதண்டராமபெருமாள், மானம்புச்சாவடி நவநீதகிருஷ்ணன், பிரசன்ன வெங்கடேசபெருமாள், மேலஅலங்கம் ரெங்கநாதபெருமாள், படித்துறை வெங்கடேசபெருமாள், கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆகிய 15 கோயில்களைச் சேர்ந்த பெருமாள்கள் கலந்துகொள்கின்றனர். [3] அந்த கோயில்களில் இந்த கோயிலும் ஒன்றாகும். பூர்வ சஞ்சீவி ஆஞ்சநேயர்முன் மண்டபத்தில் மற்றவர்களுடன் பூர்வ சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில் உள்ளார். இவர் பெயர் கொண்ட கோயிலும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இடம் பெற்றுள்ளது. [கு 1] இவருக்காக சன்னதி எதுவும் காணப்படவில்லை. குறிப்புகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia