தஞ்சாவூர் நவநீத கிருஷ்ணன் கோயில்
தஞ்சாவூர் நவநீத கிருஷ்ணன் கோயில், தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம், தஞ்சாவூரில் மேல வீதியில் அமைந்துள்ளது. தேவஸ்தான கோயில்தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.[1] அமைப்புஇக்கோயில் காமாட்சியம்மன் கோயிலை ஒட்டி வடபுறம் காணப்படுகிறது. காமாட்சியம்மன் கோயில் திருச்சுற்றில் காணப்படுகின்ற பாதை வழியாகவும் இக்கோயிலுக்கு வரலாம். ராஜகோபுரம், முன் மண்டபம், கருவறை, விமானம், வெளிச்சுற்று ஆகிய அமைப்புகளோடு விளங்குகிறது. மூலவர்இக்கோயிலின் மூலவராக நவநீத கிருஷ்ணன், ருக்மணி சத்யபாமாவுடன் உள்ளார். நவநீத சேவைநவநீத சேவையின்போது தஞ்சாவூரிலுள்ள நீலமேகப்பெருமாள், நரசிம்மப்பெருமாள், மணிக்குன்னப்பெருமாள், கல்யாண வெங்கடேசப்பெருமாள், மேலராஜவீதி நவநீதகிருஷ்ணன், எல்லையம்மன் தெரு ஜனார்த்தன பெருமாள், கரந்தை யாதவ கண்ணன் கோயில், கீழராஜவீதி வரதராஜபெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேச பெருமாள், பள்ளியக்ரகாரம் கோதண்டராமபெருமாள், மானம்புச்சாவடி நவநீதகிருஷ்ணன், பிரசன்ன வெங்கடேசபெருமாள், மேலஅலங்கம் ரெங்கநாதபெருமாள், படித்துறை வெங்கடேசபெருமாள், கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆகிய 15 கோயில்களைச் சேர்ந்த பெருமாள்கள் கலந்துகொள்கின்றனர். [2] அந்த கோயில்களில் இந்த கோயிலும் ஒன்றாகும். கல்வெட்டு1805இல் இரண்டாம் சரபோஜி மன்னரால் இக்கோயில் திருப்பணி செய்யப்பெற்றதை இக்கோயிலில் காணப்படுகின்ற மராட்டிய கல்வெட்டின் மூலமாக அறியலாம்.[3] தற்போது (ஆகஸ்டு 2016) இக்கோயிலில் திருப்பணி நடைபெற்றுவருகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia