திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம்
திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம் (Sri Ramaswamy Memorial University) அல்லது ஆங்கில முதலெழுத்துச் சுருக்கமாக எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் (SRM University) தமிழ்நாட்டில் சென்னையில் அமைந்துள்ள இருபாலரும் படிக்ககூடிய ஓர் தனியார்த்துறை நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஆகும். இதன் வளாகங்கள் தமிழ்நாட்டின் சென்னையில் காட்டாங்குளத்தூர், ராமாபுரம், வடபழனி ஆகிய மூன்று இடங்களிலும் வட இந்தியாவில் தில்லி அருகே மோடி நகரிலும், அரியானா மாநிலத்தில் உள்ள சோனிபட் நகரிலும், வடகிழக்கிந்தியாவில் சிக்கிம் மாநிலம் காங்டாக் நகரிலும் உள்ளன. முன்னதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரியாக துவங்கிய இக்கல்வி நிறுவனம் 2006ஆம் கல்வியாண்டில் நிகர்நிலை பல்கலைக்கழகமாக அங்கீகாரம் பெற்றது. இது இந்தியாவின் முதன்மை பொறியியல் கல்லூரிகள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் சிறப்பான ஒன்றாக இடம் பெற்று வருகிறது.[1] வளாகங்கள்காட்டங்குளத்தூர் வளாகம் (பிரதான வளாகம்), சென்னைசென்னை காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ள வளாகம்தான் பிரதான வளாகம் ஆகும். இது சென்னை நகரிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையான (NH-45) ஜிஎஸ்டி சாலையில் அமைந்துள்ளது. இங்கு பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் , மருத்துவம், கலை மற்றும் அறிவியல் ஆகிய மூன்று பல்கலைக்கழக கல்லூரிகள் உள்ளன. இதனுடன் எஸ்.ஆர்.எம் மேலாண்மைப்பள்ளியும் உள்ளது. மேலும் இங்கு எஸ்.ஆர்.எம் உணவக மேலாண்மை, வள்ளியம்மை பொறியியல் கல்லூரி, வள்ளியம்மை பல்தொழில்நுட்ப கல்லூரி ஆகியவையும் அமைந்துள்ளன. இங்கு புதிதாக எஸ்.ஆர்.எம் சட்டப்பள்ளி ஒன்றையும் அமைக்க பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது.[2] இவ்வளாகத்தில் 1200 படுக்கை வசதி கொண்ட பொது மருத்துவமனை ஒன்று உள்ளது. மேலும் இங்கு எஸ்.ஆர்.எம் மூன்று நட்சத்திர விடுதியும் உள்ளது. இவ்வளாகத்தில் கீழ்க்கண்ட வசதிகள் உள்ளன: ![]()
![]() இவ்வளாகத்தின் மற்றொரு சிறப்பு இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும், 48 வெளிநாடுகளில் இருந்தும் மாணவர்களை கொண்டிருப்பதே ஆகும்.[3] ராமாபுரம் வளாகம்27 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இவ்வளாகத்தில் எஸ்.ஆர்.எம் பல் மருத்துவக் கல்லூரியும், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியும், கலை அறிவியல் கல்லூரியும் உள்ளன. மேலும் இங்கு எஸ்.ஆர்.எம் குழுமத்தின் மற்றொரு பொறியியல் கல்லூரியான எஸ்.ஆர்.எம் ஈஸ்வரி பொறியியல் கல்லூரியும் உள்ளது. இவ்வளாகத்தில் கீழ்க்கண்ட வசதிகள் உள்ளன:
வடபழனி வளாகம்(சென்னை நகர வளாகம்)இவ்வளாகம்தான் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் சிறிய வளாகமாகக் கருதப்படுகிறது. இங்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், மேலாண்மை, கணினித்தொழில்நுட்பம் மற்றும் சிவாஜி கணேசன் திரைப்படக்கல்லூரியும் உள்ளன. மேலும் இவ்வளாகத்தின் சிறப்பம்சமாக SIMS எனப்படும் எஸ்.ஆர்.எம் இன்ஸ்டிடியூட்ஸ் ஆப் மெடிக்கல் சயின்ஸ் என்ற அதிநவீன மருத்துவமனை அமையப்பெற்றுள்ளது. இவ்வளாகத்தில் கீழ்க்கண்ட வசதிகள் உள்ளன:
மோடிநகர், காசியாபாத் வாளகம், டெல்லி தேசிய தலைநகர் பகுதி25 ஏக்கர் பரப்பளவில் பசுமையான சூழலில் டெல்லி- மீரட் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இங்கு பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், மேலாண்மை மற்றும் ஆசிரியர் கல்வி கல்லூரிகள் உள்ளன. இவ்வளாகத்தில் கீழ்க்கண்ட வசதிகள் உள்ளன:
சோனிபட் வளாகம், அரியானா150 ஏக்கர் பரப்பளவில் அமையப்பெற்றுள்ள இவ்வளாகம், ராஜீவ் காந்தி கல்வியியல் நகரத்தில் உள்ளது. இங்கு பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், மேலாண்மை ஆகிய படிப்புகள் 2014ஆம் கல்வி ஆண்டு முதல் செயல்படுகின்றன. தற்போது கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதனால் இவ்வளாகம் முழுமையாக 2015ஆம் ஆண்டு முதல் செயல்படத்துவங்கும். மேலும் இங்கு சட்டம், நூலக மற்றும் தகவல் அறிவியல் ,நிதி மற்றும் வணிகம், கலை மற்றும் அறிவியல் ஆகிய கல்லூரிகள் அமையப்பெற உள்ளன.[7] காங்டாக் வளாகம், சிக்கிம்இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் தனது புதிய வளாகத்தை திறக்கப்போவதாக அறிவித்துள்ளது. 50 ஏக்கர் பரப்பளவில், சிக்கிம் மாநில தலைநகரான காங்டாக்கில் கட்டப்பட்டுள்ள இவ்வளாகம், 2014ஆம் கல்வியாண்டு முதல் செயல்படத்துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இங்கு முதலில் பிபிஏ, எம்பிஏ, பி.காம் போன்ற படிப்புகளுக்கு தொலைதூர கல்வியையும், பின் பொறியியல் கல்வியையும் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.[8] குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia