திருவொற்றியூர் ஒருபா ஒருபது

திருவொற்றியூர் ஒருபா ஒருபது [1] என்னும் சைவ நூல் பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. பத்து, பதிகம் என்னும் பெயர் பூண்டு விளங்குவது ஒருவகைச் சிற்றிலக்கியம் இதன் ஆசிரியர் பட்டணத்துப் பிள்ளையார். சென்னையிலுள்ள திருவொற்றியூர் பகுதியில் வாழ்ந்தவர். காலம் பத்தாம் நூற்றாண்டு. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலிலுள்ள சிவபெருமானை இந்த நூல் போற்றிப் பாடுகிறது.

நூல் அமைதி

இந்த நூலில் பத்து ஆசிரியப்பாக்கள் உள்ளன. பாடல்கள் நீளமானவை. அவை அந்தாதி முறையில் தொடுக்கப்பட்டுள்ளன. நூல் ‘இருநிலம்’ என்னும் தொடருடன் தொடங்கி ‘இருநிலத்தே’ என்று அதே தொடரில் முடிகிறது.

நூல் சொல்லும் சில செய்திகள்

• நிலமடந்தைக்கு மேகலை கடல். அந்த மேகலைக்கு முகம் போன்றது ஒற்றிமாநகர்.
• ஆண் அல்லது பெண் என ஓருருவின் பெற்றி இல்லாதவன் சிவன்
• பெற்றோர் யாரோ தெரியவில்லை.
• பாவகன் (தீ), பரிதி, மதி ஆகிய மூன்று கண்களை உடையவன்.
• விசும்பே அவன் உடம்பு
• எட்டுத் திசையும் அவனுக்கு எட்டுத் தோள்
• கடல் உடை
• மண்டலம் அவன் அல்குல் (பெண்ணுறுப்பு)
• மணிமுடிப் பாந்தள் (பாம்பு) அவன் தாள்
• மாருதம் (காற்று) அவன் உயிர்க்கும் மூச்சு
• ஓசை அவன் வாய்மொழி
• நிரம்பிய ஞானம் அவன் உணர்வு
• உலகின் நீர்மை, நிற்றல், சுருங்கல், விரிதல், தோற்றம் – ஐந்தும் தொழில்.
• அமைதல், அழிதல், பெயர்தல், இமைத்தல், விழித்தல் – ஐந்தும் இயல்பு

காலம் கணித்த கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005

அடிக்குறிப்பு

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya