துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி 2003
துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப்போட்டி 2003 (2003 Cricket World Cup Final, கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டி 2003) என்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் எட்டாவது உலகக் கிண்ணத்துக்காக இடம்பெற்ற சுற்றுப் போட்டிகளின் இறுதிப் போட்டி பற்றியதாகும். இப்போட்டி 2003 மார்ச் 24 ஆம் நாள் ஜோகானஸ்பேர்க் துடுப்பாட்ட அரங்கில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் ஆத்திரேலியா அணி இந்திய அணியை வென்று மூன்றாவது தடவையாக உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்டது. நடைபெற்ற திகதி50 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இப்போட்டி மார்ச் 23 2003ல் நடைபெற்றது. நடைபெற்ற அரங்கம்தென்னாபிரிக்க ஜொஹானஸ்பேர்க் அரங்கம் இறுதிப் போட்டி அணிகள்ஆத்திரேலியா அணி
இந்தியா அணி
நாணயச்சுழற்சிஇப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இந்தியா அணி அவுஸ்திரேலியா அணியை முதலில் துடுப்பாடப் பணித்தது. நடுவர்கள்இந்த ஆட்டத்துக்கான நடுவர்களாகக் களத்தில் மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த எஸ். ஏ. பக்னரும், இங்கிலாந்தைச் சேர்ந்த டி. ஆர். ஷெப்பேர்ட்டும், மூன்றாவது நடுவராக ஆர்.இ. கொரிட்சனும் பங்கேற்றனர். போட்டி நடுவராக இலங்கையைச் சேர்ந்த ரன்ஜன்மடுகல்ல பணியாற்றினார். இறுதிப் போட்டிஆத்திரேலியா அணியின் துடுப்பாட்டம்முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 50 ஓவர் நிறைவில் 2 விக்கட் இழப்பிற்கு 359 ஓட்டங்களைப் பெற்றது.
உதிரிகள் - 37 மொத்தம் 50 ஓவர் நிறைவில் 2 விக்கட் இழப்பிற்கு 359 ஓட்டங்கள் ஆட்டமிழந்த ஒழுங்கு: 1-105 (கில்கிறிஸ்ட், 13.6), 2-125 (ஹெய்டின், 19.5 ) துடுப்பெடுத்து ஆடாதவர்கள் டரன் லேமன், மைக்கல் பெவன், ஏ. சீமொன், ஜீ.பி. ஹோக், ஏ.ஜே. பிஹேல், பிரட்லீ, கிளென் மெக்ரா இந்தியா அணியின் பந்து வீச்சு
இந்தியா அணியின் துடுப்பாட்டம்இந்தியா அணி 39.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 234 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
உதிரிகள் - 21 மொத்தம் 39.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 234 ஓட்டங்கள் ஆட்டமிழந்த ஒழுங்கு: (சச்சின் டெண்டுல்கர், 0.5), 2-58 (கங்குலி, 9.5), 3-59 (மொகமட் கைப், 10.3), 4-147 (வீரேந்தர் சேவாக், 23.5), 5-187 (டார்விட், 31.5), 6-208 (யுவராஜ் சிங், 34.5), 7-209 (மொங்கியா, 35.2), 8-223 (ஹர்பஜன் சிங், 37.1), 9-226 (ஜே. சிரிசாந், 38.2), 10-234 (சாகீர் கான், 39.2) ஆத்திரேலியா அணியின் பந்து வீச்சு
முடிவு
இப்போட்டியில் அவுஸ்திரேலியா அணி 125 ஓட்டங்களினால் இந்தியா அணியை வெற்றி கொண்டு 2வது தடவையாகவும் உலக துடுப்பாட்டக் கிண்ணத்தைத் தனதாக்கிக் கொண்டது. போட்டியில் ஆட்டநாயகனாக ரிக்கி பாண்டிங் தெரிவானார். தொடர் ஆட்ட நாயனாக சச்சின் டெண்டுல்கர் தெரிவானார். |
Portal di Ensiklopedia Dunia