நீலகேசிநீலகேசி என்பது ஐஞ்சிறு காப்பியங்கள் எனப்படும் ஐந்து தமிழ் இலக்கிய நூல்களுள் ஒன்றாகும். சமண சமய நூலான நீலகேசி ஒரு கதைப் பின்னணியில் சமணக் கொள்கைகளை விளக்குகின்றது. தமிழில் எழுதப்பட்ட முதலாவது தருக்க நூல் இதுவெனக் கூறப்படுகின்றது. பௌத்த சமயத்தின் பெருமை கூற எழுந்த காப்பியமான குண்டலகேசி எனும் நூலுக்கு மறுப்பாகவே நீலகேசி எழுதப்பட்டுள்ளது. எனினும் இதனை எழுதியவர் யார் எனத் தெரியவில்லை. இந்நூலுக்கு நீலகேசி திரட்டு என்ற பெயரும் காணப்படுகிறது.[1] இந்நூல் கடவுள் வாழ்த்து நீங்கலாக 10 சருக்கங்களை கொண்டது. இப்பதினொரு பகுதிகளிலும் மொத்தமாக 894 பாடல்கள் உள்ளன. இவையனைத்தும் விருத்தப்பாவினால் ஆனது. இப்பகுதிகளின் பெயர்களையும், அவற்றில் உள்ள பாடல்களின் எண்ணிக்கைகளையும் கீழுள்ள பட்டியலில் காணலாம்.
நீலகேசியின் காலம்நீலகேசியின் காலம் பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதி என கணிக்கப்பட்டுள்ளது[2]. ஆனால் நீலகேசியில் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த தர்ம கீர்த்தி சிந்தனைகள் காணப்படுவதால் நீலகேசி கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தோன்றியது என லி. சிவகுமார் கருதுகின்றார். [3] மேற்கோள்கள்
உசாத்துணைகள்
இவற்றையும் பார்க்கவும்வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia