நையோபியம் பெர்குளோரேட்டு
தயாரிப்புநையோபியம் பெண்டாகுளோரைடுடன் நீரற்ற பெர்குளோரிக்கு அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்து நையோபியம் பெர்குளோரேட்டை தயாரிக்கலாம்:[1]
வினைகள்நையோபியம் பெர்குளோரேட்டு 70 பாகை செல்சியசு வெப்பநிலையில் சிதைவடைந்து நையோபைல் பெர்குளோரேட்டாக மாறுகிறது. இவ்வினையில் இருகுளோரின் ஏழாக்சைடு வாயு வெளியிடப்படுகிறது:[1]
நையோபைல் பெர்குளோரேட்டு 115 பாகை செல்சியசு வெப்பநிலையில் மேலும் சிதைவடைந்து NbO2ClO4 சேர்மத்தைக் கொடுக்கும். இது 220 பாகை செல்சியசு வெப்பநிலையில் மேலும் சிதைவடைந்து நையோபியம் பெண்டாக்சைடைக் கொடுக்கிறது.[1] சீசியம் பெர்குளோரேட்டு மற்றும் நையோபியம் பெர்குளோரேட்டு போன்ற பெர்குளோரேட்டுகளுடன் நீரற்ற பெர்குளோரிக் அமிலத்துடன் 0 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரிவதால் [Nb(ClO4)6 மற்றும் Cs2[Nb(ClO4)7 போன்ற பெர்குளோரேட்டோநையோபேட்டுகள் உருவாகின்றன. [1] கட்டமைப்புநியோபியம் பெர்குளோரேட்டின் கட்டமைப்பு ஒற்றை-படிக எக்சுகதிர் விளிம்புவளைவு ஆய்வு மூலம் தெளிவுபடுத்தப்படவில்லை என்றாலும், அகச்சிவப்பு மற்றும் தூள் எக்சுகதிர் விளிம்புவளைவு ஆய்வு மூலம் தெளிவுபடுத்தப்பட்டது. இதன்படி நையோபியம் பெர்குளோரேட்டில் ஒற்றையீதல் பிணைப்பு மற்றும் ஈரீதல்பிணைப்பு ஈந்தணைவிகள் இரண்டும் உள்ளன.[1] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia