போட்டி நடைபெறும் அரங்குகள்
பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் இலங்கை சுற்றுப்பயணம் 2014 ஆகத்து 6 தொடக்கம் 2014 ஆகத்து 30 வரை இடம்பெற்றது. இச்சுற்றுப் பயணத்தின் போது பாக்கித்தான் துடுப்பாட்ட அணி இலங்கை அணிக்கு எதிராக இரண்டு-தேர்வுப் போட்டிகளிலும், பின்னர் மூன்று-ஒருநாள் போட்டிகளிலும் பங்குபற்றியது.[1] இதற்கு மேலதிகமாக பாக்கித்தான் அணி முன்னோட்டப் போட்டிகளாக ஒரு ஒருநாள் முதல்-தரத் துடுப்பாட்டப் போட்டியிலும் பங்குபற்றியது. இலங்கை அணி தேர்வுத்தொடரில் 2-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கிலும் வெற்றி பெற்றது.
இலங்கை வீரர் மகேல ஜயவர்தனவிற்கு இம்முறை இடம்பெறும் தேர்வுப் போட்டிகள் அவர் விளையாடிய கடைசிப் போட்டிகள் ஆகும். இவர் தேர்வுப் போட்டிகளில் இருந்து விலகவிருப்பதாக 2014 சூலையில் அறிவித்தார்.[2]
இரண்டாவது தேர்வுப் போட்டியின் இரண்டாம் இன்னிங்சில் இலங்கைப் பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் 127 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதுவே இடக்கை-பந்துவீச்சாளர் ஒருவரின் மிகத்திறமையான ஆட்டம் ஆகும்..[3]
அணிகள்
பயிற்சிப் போட்டி
பிரெசிடென்ட் XI அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டி
இலங்கை பிரெசிடென்ட் XI அணி 325/7 (50 ஓவர்கள்)
|
எ
|
|
|
|
|
பிரெசிடென்ட் அணி 13 ஓட்டங்களால் (ட/லூ முறையில்) வெற்றி டிரோன் பெர்னாண்டோ அரங்கு, மொறட்டுவை நடுவர்கள்: லின்டன் ஹானிபால் (இல), பிரதீப் உடவத்த (இல)
|
- பிரெசிடென்ட் அணி நாணயச்சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- வெளிச்சம் போதாமையினால் பாக்கித்தான் அணியின் ஆட்டம் 46.2 ஓவர்களில் நிறுத்தப்பட்டது.
தேர்வுத் தொடர்
முதல் தேர்வு
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
- 3ம் நாள் ஆட்டத்தில் மழை காராணமாக 46 ஓவர்கள் மட்டுமே விளையாடப்பட்டது.
- இப்போட்டியை அடுத்து, பன்னாட்டுத் தேர்வுத் தரவரிசையில் குமார் சங்கக்கார 920 புள்ளிகளுடன் முதலிடத்தை அடைந்தார்.[6]
இரண்டாவது தேர்வு
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- மகேல ஜயவர்தன விளையாடிய கடைசித் தேர்வுப் போட்டி இதுவாகும்.[7]
- முதலாவது இன்னிங்சில் இலங்கை வீரர் ரங்கன ஹேரத் பெற்ற 9 விக்கெட்டுகள் (127 ஓட்டங்களில்) சாதனை தேர்வுத் துடுப்பாட்டத்தில் இடக்கை-பந்துவீச்சாளர் ஒருவர் பெற்ற பெரும் சாதனை ஆகும்.[3]
ஒருநாள் பன்னாட்டுப் போட்டித் தொடர்
1வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி
- பாக்கித்தான் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் களத்தடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக ஆட்டம் 45 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
2வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என சமநிலையை எட்டியது
3வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் முதலில் துடுப்பாடத் தீர்ர்மானித்தது.
- மழை காரணமாக ஆட்டம் 48 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. இலங்கை அணி வெறி பெற 101 எடுக்க வேண்டியிருந்தது.
மேற்கோள்கள்