பின்னைப்பெண்ணியம்
பின்னைப்பெண்ணியம் (Postfeminism) என்பது, இரண்டாம் அலைப் பெண்ணியத்தில் காணப்பட்ட சில முரண்பாடுகளுக்கும், குறைபாடுகளுக்கும் எதிர்விளைவாகத் தோன்றிய ஒரு வகைப் பெண்ணியக் கோட்பாடு ஆகும். பின்னைப்பெண்ணியம் என்பது சரியாக வரையறுக்கப்படாததுடன், மாறுபட்ட வழிகளில் பயன்படுத்தப்பட்டும் வருகிறது. இச்சொல் பொதுவாக வழக்கில் உள்ள அல்லது முன்னர் வழக்கில் இருந்த பெண்ணியத்தில் இருந்து பின்னர் வந்ததை வேறுபடுத்திக் காட்டுவதற்குப் பயன்படுகிறது. வரலாறு1919ல் சஞ்சிகையொன்றை வெளியிட்ட பெண் இலக்கிய அடிப்படைமாற்றவாதக் குழுவினர், அதன் மூலம், தாங்கள் மக்கள்மீதே ஆர்வம் ஆண்களிலும் பெண்களிலும் அல்ல என்றும் , ஒழுக்க, சமூக, பொருளாதார, அரசியல் தர அளவுகள் எவ்வகையிலும் பால் சார்ந்தவை அல்ல என்றும் கூறினர். அவர்கள் ஆணுக்கு எதிராக அல்லாத, பெண்ணுக்குச் சார்பான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர். இது பின்னைப்பெண்ணிய நிலைப்பாடு என அழைக்கப்பட்டது.[1] குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia