பெரிய நம்பி
ஆளவந்தாரின் முதன்மை சீடர்களுள் ஒருவராய், அவருக்கு அடுத்தபடியாக விசிஷ்டாத்வைத சமயத்தின் ஆச்சாரியானாக மடத்தை அலங்கரித்தவர் பெரியநம்பிகள் ஆவார். இவர் மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் திருவரங்கத்தில் மகாபூரணர் எனும் இயற்பெயரில் பிறந்தார். இராமானுசரின் ஐந்து ஆச்சாரியர்களில் ஒருவரும் இவரே. ஆளவந்தாரின் சீடர்களில் ஒருவரான மாறனேறி நம்பி, தன்னுடைய ஆசிரியருக்கு இருந்த ராஜபிளவை நோயை தனக்கு வாங்கிக் கொண்டார்.[1] அதனால் இறுதிகாலத்தில் யாருமற்ற குடிசையில் மடிந்தார். அவர் தாழ்ந்த குலத்தவர் என்பதால் யாரும் இறுதிக்கடன்களை செய்ய முடியவில்லை. பெரிய நம்பி முன்வந்து மாறநேரி நம்பிக்கு இறுதிக் கடன்களை வைணவ முறைப்படி செய்தார். இதற்காக திருவரங்க வைணவர்கள் அவரை சாதியிலிருந்து தள்ளி வைத்தனர்.[1] இதனால் திருவரங்க உற்சவரான நம்பெருமாளிடம் பெரிய நம்பியின் மகள் அத்துழாய் முறையிட்டாள்.[2] நம்பெருமாள் பெரிய நம்பியின் மீது தவறில்லை எனக்கூறியமையால் அங்கிருந்த வைணவர்கள் அதனை ஏற்றனர். சீடர்கள்
மற்ற பெயர்கள்
சிறப்பு
தனியன்வைணவத்திற்காகவும் , இராமானுசருக்காகவும் தன் கண்களையும் உயிரையும் இழந்த பெரிய நம்பிகள் தன்னுடைய நூற்றைந்தாவது அகவையில் ஜோதிஷ்குடி எனப்படும் காளையார்கோயிலில் தன் ஆச்சாரியன் திருவடி (உயிர்நீத்தல் என்பதின் வைணவச்சொல்)அடைந்தார். அவ்வாச்சாரியரின் புகழ்பாடும் வடமொழி தனியன் இதோ:
ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia