பேங்காக் (Bangkok) தாய்லாந்தின்தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது தாய்லாந்தின் மொழியில், குருங் தேப் மஹா ந கொன் (กรุงเทพมหานคร) என வழங்கப்படுகிறது. இதில் குருங் தேப் என்ற தாய்ச் சொல்லின் பொருள், "தேவதைகளின் நகரம்" என்பதாகும். மத்திய தாய்லாந்தின் சாவோ பிரயா ஆற்றுப் படுகையில் 1,568.7 சதுர கிலோமீட்டர்கள் (605.7 sq mi) பரப்பளவில் அமைந்துள்ள பேங்காக்கில் 9 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இது தாய்லாந்தின் மக்கள்தொகையில் 12.6 விழுக்காடு ஆகும். பேங்காக் பெருநகர மண்டலம் எனப்படும் சுற்றுப்புறப் பகுதிகளையும் சேர்த்து 14 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.
15ஆம் நூற்றாண்டில் அயூத்தியா இராச்சியத்தில் சிறு வணிகத்துறையாக இருந்த பேங்காக் படிப்படியாக வளர்ச்சியுற்று இரண்டு தலைநகரங்களின் அமைவிடமாக விளங்கியது; 1768இல் தோன்புரி மற்றும் 1782இல் இரத்தனகோசின். பத்தொன்பதாம் நூற்றாண்டில் சயாம் என அழைக்கப்பட்ட தாய்லாந்தின் நவீனப்படுத்துதலின் மையமாக பேங்காக் இருந்தது. அக்காலத்தில் மேற்கத்திய தாக்கம் மிகுந்திருந்தது. இருபதாம் நூற்றாண்டில் வரையற்ற மன்னராட்சி நீக்கப்பட்டு பல புரட்சிகளை சந்தித்த தாய்லாந்தின் அரசியல் போராட்டங்களின் மையமாக பேங்காக் அமைந்திருந்தது. 1960களிலிருந்து 1980கள் வரையிலான காலத்தில் மிக விரைவான வளர்ச்சியை கண்டது. தாய்லாந்தின் அரசியல், பொருளியல், கல்வி, ஊடகம் மற்றும் நவீன சமூகம் ஆகியவற்றில் பேங்காக்கின் தாக்கம் குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
1980களிலும் 1990களிலும் ஏற்பட்ட ஆசிய பொருளாதார வளர்ச்சியை ஒட்டி பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் ஆசிய மண்டல தலைமையகங்களை பேங்காக்கில் நிறுவின. இதனால் இந்த மண்டலத்தில் பேங்காக் ஓர் முக்கிய நிதிய, வணிக விசையாக விளங்குகிறது. மேலும் பன்னாட்டுப் போக்குவரத்து மற்றும் நலத்துறை நிறுவனங்களின் அச்சுமையமாகவும் விளங்குகிறது. கலை, கவின்கலை, மனமகிழ் நிகழ்வுகளுக்கான மண்டல மையமாகவும் உருவெடுத்து வருகிறது. இங்குள்ள பரபரப்பான சாலை வாழ்க்கையும் பண்பாட்டுச் சுவடுகளும் பரவலாக அறியப்பெற்ற சிவப்பு விளக்கு மாவட்டங்களும் தனிக் கவர்ச்சியைக் கொடுத்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க மாபெரும் அரண்மனை, வாட் அருண், வாட் ஃபோ போன்ற புத்தமதக் கோவில்கள் இவற்றிலிருந்து வேறுபட்ட ஆவலைத் தூண்டுகின்றன. இவற்றால் பேங்காக் உலகின் மிகக்கூடிய சுற்றுலாப் பயணிகளை உடைய நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. மாஸ்டர்கார்டு வெளியிடும் உலகளாவிய வருகைபெறும் நகரங்களின் பட்டியலில் இலண்டன், பாரிசை அடுத்து மூன்றாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலாக் குறித்த உலகளாவியத் துறையிதழ் ஒன்றில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக உலகின் சிறந்த நகரமாக பெயரிடப்பட்டுள்ளது.
இன்று, தெற்கிழக்காசியாவில், மிக முக்கியமான வர்த்தக மையமாக பேங்காக் விளங்குவதோடு, பல சுற்றுலாப் பயணிகளையும் கவர்ந்துள்ள பயண நுழைவாயிலாகவும் விளங்குகின்றது. இங்கு மிகவும் உயர்ந்த செலவில் அலங்கரிப்பட்டுள்ள 400 புத்தர் கோயில்கள் காணப்படுவதோடு, ஆசியாவிலேயே மிகப் பெரியளவான விற்பனை வளாகங்களும் காணப்படுகின்றன. அத்தோடு இங்கு ஆறு பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இங்கு காணப்படும் எண்ணிலடங்கா கால்வாய்களினால், மிதக்கும் சந்தைகள் பலதையும் உருவாக்கின்ற தளமாகவிருக்கிறது. இதனால், பேங்காக், "கிழக்கின் வெனிசு" என்று வழங்கப்படுவதுமுண்டு.
போதிய நகரமைப்பு திட்டமிடல் மற்றும் கட்டுப்பாடு இல்லாது விரைவான வளர்ந்துள்ள பேங்காக் சரியான கட்டமைப்பு அமைப்புகள் இன்றி அமைந்துள்ளது. போதிய சாலைகள் இல்லாததாலும் மிகுதியான தனியார் ஊர்திகள் பயன்பாட்டினாலும் எப்போதும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. தாய் விரைவுவழி அமைப்பு அமைக்கப்பட்டபோதும் இச்சிக்கல் இன்றும் தீரவில்லை. 1990களில் இதனால் மிகுந்த காற்று மாசடைதல் உண்டானது. இதற்கு தீர்வாக நான்கு விரைவுத் தொடருந்து வழிகள் அமைக்கப்பட்டு இயக்கத்தில் உள்ளன; மேலும் பல வழிகள் கட்டமைக்கப்பட்டும் திட்டமிடப்பட்டும் வருகின்றன.
பெயர்
பேங்காக் நகராட்சியில் தாய் எழுத்துருக்களில் முழுமையாக குருங் தேப் மஹாந …மகோக் தாவரத்திலிருந்து பேங்காக் என்ற பெயர் வந்திருக்கலாம்.
பேங்காக் (บางกอก என்ற சொல்லின் சொற்பிறப்பியல் தெளிவாக இல்லை. பேங் என்ற தாய்ச்சொல்லிற்கு "ஓடையிலமைந்த சிற்றூர்",[1] என்றும் இதன் பெயர் பேங் கோ (บางเกาะ),( கோவின் பொருள் "தீவு", இப்பகுதியில் பல ஆறுகளும் கால்வாய்களும் ஏற்படுத்திய நிலப்பகுதியை குறிக்க) என்பதிலிருந்து வந்திருக்கலாமென்றும் கருதப்படுகிறது.[2]பேங்காக் என்பது பேச்சுவழக்குப் பெயராக இருந்திருக்கலாம்; ஆனால் இதுவே வெளிநாட்டுப் பயணிகளால் பயன்படுத்தபடத் துவங்கி பரவலான பயன்பாட்டால், பேங்காக் பெருநகர நிர்வாகம் போன்ற சொல்லாட்சிகளில், அலுவல்முறையாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
பேங்காக்கின் முழுமையான அலுவல்முறைப் பெயர், குருங் தேப் மஹாந கொன் அமன் ரத்டனகொசின் மஹிந்தரயுத்தய மகாடிலோக் போப் நோப்ப்ஹராத் ராட்சதனி புரிறோம் உடோம்ரட்சநிவேட் மகாசதன் அமன் பிமன் அவதான் சதித் சக்கதட்டிய விட்சனுகம் பிரசித் (Audio file " Th Bangkok ceremonial name.ogg " not found) என்பதாகும். 168 இலத்தீன் எழுத்துக்களை கொண்ட பேங்காக்கின் பெயரே, உலகின் நகரமொன்றின் மிக நீளமான பெயராகும் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. தாய்லாந்தின் மொழியில் 139 எழுத்துருக்களைக் கொண்டுள்ளது.
பெரும்பாலும் பாலியிலும் சமசுகிருதத்திலும் வேர்ச்சொற்களைக் கொண்ட இப்பெயரின் மொழிமாற்றம் இவ்வாறுள்ளது:
தேவதைகளின் நகரம், அழியாதவர்களின் பெருநகரம், நவரத்தினங்களினாலான சீர் நகரம்,மன்னரின் நகரம், அரச மாளிகைகளின் நகரம், அவதார கடவுளரின் இல்லம், இந்திரனின் ஆணையால் விசுவகர்மனால் கட்டப்பட்டது.[3]
பன்னாட்டளவில் பேங்காக் என்ற பெயர் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. உள்ளூர் மக்கள் பொதுவாக குருங் தேப் (தேவதைகளின் நகரம்) என்று அழைக்கின்றனர். தானுந்து உரிமப்பட்டைகளில் குருங் தேப் மகா நகொன் என்று குறிக்கப்படுகிறது.
சகோதர நகரங்கள்
பேங்காக் நகரம் 2013 நிலவரப்படி 15 நாடுகளிலுள்ள 23 நகரங்களுடன் சகோதர நகரமாகவும் நட்பு நகரமாகவும் உடன்பாடு கண்டுள்ளது.[4] அவை:
↑Chandrashtitya, Tipawan; Matungka, Chiraporn. "ประวัติเมืองธนบุรี". Arts & Cultural Office website (in Thai). Dhonburi Rajabhat University. Archived from the original on 13 ஜூலை 2010. Retrieved 11 December 2011. {{cite web}}: Check date values in: |archivedate= (help); Unknown parameter |trans_title= ignored (help)CS1 maint: unrecognized language (link)
↑Royal Institute Newsletter (Royal Institute) 3 (31). December 1993. Reproduced in "กรุงเทพมหานคร" (in Thai). Retrieved 12 September 2012. {{cite web}}: Unknown parameter |trans_title= ignored (help)CS1 maint: unrecognized language (link)
↑International Affairs Division. "Relationship with Sister Cities". International Affairs Division website. International Affairs Division, Bangkok Metropolitan Administration. Retrieved 12 September 2012.
↑International Affairs Division. "Relationship with Sister Cities: Fukuoka". International Affairs Division website. International Affairs Division, Bangkok Metropolitan Administration. Archived from the original on 15 ஜூலை 2019. Retrieved 12 September 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
↑International Affairs Division. "Relationship with Sister Cities: Aichi". International Affairs Division website. International Affairs Division, Bangkok Metropolitan Administration. Archived from the original on 14 ஜூலை 2019. Retrieved 12 September 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
Hamilton, Annette (2000). "Wonderful, Terrible: Everyday Life in Bangkok". In Bridge, Gary; Vatson, Sophie (eds.). A Companion to the City. Blackwell Publishing. pp. 460–471. ISBN0-631-23578-7.
Krongkaew, Medhi (1996). "The changing urban system in a fast-growing city and economy: The case of Bangkok and Thailand". In Lo, Fu-chen; Yeung, Yue-man (eds.). Emerging World Cities in Pacific Asia. United Nations University Press. pp. 286–334. ISBN92-808-0907-5.
Thavisin, Nathanon; Semson, Pongsak; Padhanarath, Kriengpol, eds. (2006). Your Key to Bangkok. Bangkok: International Affairs Division, Bangkok Metropolitan Administration. ISBN974-9565-72-X. Archived from the original on 2013-10-02. Retrieved 2013-06-04.