மதுரை முத்து (நகைச்சுவையாளர்)
மதுரை முத்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மேடை, தொலைக்காட்சி சிரிப்புரையாளர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். இவர் கலக்கப் போவது யாரு, அசத்தப் போவது யாரு, காமெடி ஜங்சன் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஊடாக பரந்து அறியப்பெற்றார். பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் நடுவராகவும் செயல்படுகிறார். 2025 ஆம் ஆண்டில் தன்னுடைய தாய், தந்தை, மனைவி ஆகியோருக்கு கோவில் கட்டி சிலைகள் அமைத்து மதுரை முத்து திறப்பு விழா நடத்தினார்.[1] வாழ்க்கைக் குறிப்புஇவர் தமிழகத்தின், மதுரை மாவட்டம், கள்ளிக்குடி வட்டம், டி. அரசபட்டி என்ற ஊரில் பிறந்தார்.[2][3] இவருக்கு மனைவி லேகா மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இவரின் மனைவி லேகா என்ற வையம்மாள் தனது 32-வது வயதில், 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி கார் விபத்தில் உயிரிழந்தார்.[4] பின்னர் சில மாதங்கள் கழித்து, தனது மனைவி வையம்மாளின் தோழியான பல் மருத்துவர் நீத்து என்பவரை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார்.[5] நிகழ்ச்சிகள்
திரைப்படங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia